குமுளி மலைப்பாதையில் மண் சரிவு: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

குமுளி மலைப்பாதையில் மண் சரிவு:  அச்சத்தில் வாகன ஓட்டிகள்
X

குமுளி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

குமுளி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்

தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதை ஆறு கி.மீ நீளம் உள்ளது. இந்த மலைப்பாதை மிகவும் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை தொடர்ந்து கொண்டே இருப்பதால் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த பாதையில் பெருமளவு சரிவு ஏற்பட்டால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும். எனவே இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மலைப்பாதையில் சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சரிவு ஏற்படாமல் இருக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு