பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சமையலர் பற்றாக்குறை

பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சமையலர் பற்றாக்குறை
X

மாதிரி படம்

தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் வார்டன், சமையலர் பற்றாக்குறை நிலவுவதால், மாணவ, மாணவிகள் அவதி

தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சார்பில் 30 விடுதிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 37 விடுதிகளும் உள்ளன. ஒரு விடுதிக்கு ஒரு காப்பாளர், இரண்டு சமையலர், ஒரு உதவியாளர் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது தேனி மாவட்ட விடுதிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு விடுதிக்கு ஒரு சமையலர் மட்டுமே உள்ளார். இதனால் மாணவ, மாணவிகளுக்கு நேரத்திற்கு உணவு தயாரித்து வழங்க முடியவில்லை. பல நேரங்களில் பட்டினியுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

காப்பாளர்கள் (வார்டன்) எண்ணிக்கையும் மிக குறைவாக உள்ளதால், ஒரு காப்பாளர் இரண்டு விடுதிகள், மூன்று விடுதிகளை பொறுப்பாக கவனிக்க வேண்டிய நிலை கூட காணப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் காப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!