டவுன் பஸ் வசதி பற்றாக்குறை! பள்ளி செல்ல போராடும் மாணவர்கள்!

டவுன் பஸ் வசதி பற்றாக்குறை!  பள்ளி செல்ல போராடும் மாணவர்கள்!
X
தேனி மாவட்டத்தில் தேவைக்கேற்ப அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை

தேனி மாவட்டத்தில் அரசு டவுன் பஸ் வசதி பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு படிக்க வரும் மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள், 24 பேரூராட்சிகள் இருந்தாலும், பள்ளி கல்வியில் உயர் வகுப்புகளை படிக்க நகர் பகுதிக்கு மாணவர்கள் அதிகம் வருகின்றனர். 130 கிராம ஊராட்சியிலும் 625 சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள நகர் மற்றும் பேராட்சி பகுதிகளில் அமைந்துள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கு வர இலவச டவுன் பஸ் வசதி உள்ளது. ஆனால் பெரும்பலான கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் டவுன் பஸ்கள் இல்லை. பல கிராமங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் பஸ்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் இந்த பஸ்களில் மிகவும் நெருக்கியடித்து பயணிக்கின்றனர். பலர் பள்ளிகளுக்கு பல கி.மீ., துாரம் நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். இந்நிலையில் மகளிருக்கும் அரஸ் பஸ்களில் இலவச பயணம் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களது கூட்டமும் அதிகம் உள்ளது. அரசு பஸ்களில் பள்ளி நேரங்களில் இவ்வளவு நெரிசல் காணப்படுகிறது. இந்த பள்ளிகளை திறந்தால் மேலும் அதிக மாணவர்கள் வருவார்கள் சிரமங்கள் கூடும்.

அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், தேவைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இ யக்காமல், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் எந்த பயனும் இல்லை. இதனால் மாணவர்களின் சிரமங்கள் தான் அதிகரிக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தேனி கலெக்டர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!