/* */

கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: தமிழக விவசாயிகள் நிம்மதி

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு தமிழக விவசாயிகளுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

HIGHLIGHTS

கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: தமிழக விவசாயிகள் நிம்மதி
X

உச்சநீதி மன்றம் ( பைல் படம்)

முல்லை பெரியாறு அணையில் தொட்டதிற்கெல்லாம் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போட்டு தமிழகத்திற்கு தொல்லை கொடுத்த கேரளாவிற்கு நேற்று சுப்ரீம் கோர்ட் பலத்த கொட்டு வைத்தது தமிழக விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையில்லாமல் நெருக்கடி கொடுப்பது கேரளாவிற்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் கேரளாவில் அரசு தொடர்கிறதோ இல்லையோ, சமூக ஆர்வலர்கள் எனக்கூறிக்கொண்டு ஒவ்வொருவராக வழக்கு தொடர்ந்தனர்.

நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோரது அமர்வின் முன்பு, 'முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், 'இது போன்ற சின்ன சின்ன நிர்வாக பிரச்னைகளில் எல்லாம் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. சுப்ரீம்கோர்ட் நியமித்துள்ள கண்காணிப்பு குழுவை அணுகுங்கள். கண்காணிப்புக்குழு இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கும். ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் வழக்கு தொடர்வதை நிறுத்துங்கள் என கண்டித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தமிழக விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு எதிரான பிரசாரம் செய்யும் சேவ் கேரளா அமைப்பு, வல்லக்கடவு வரை வந்து விட்டது. இந்த வாரம் குமுளிக்கும் வர உள்ளது. இந்நிலையில் அவர்களை எப்படி எதிர்கொள்வது என தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Updated On: 16 Dec 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்