தர்மாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற தர்மாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு கோட்டூர் ஹீரோ ஸ்டார் கூட்டமைப்பு சார்பில் சான்று வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் கோட்டூரில் உள்ள ஹீரோ ஸ்டார் கூட்டமைப்பு (பதிவு எண் 17/2016) பல்வேறு நலத்திட்ட மற்றும் சமூக திட்ட பணிகளை செய்து வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளை படிப்பதற்கு ஊக்கப்படுத்துவது, படிப்பில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டுவது, மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்துவது, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவது, வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேளையில் சேர வழிகாட்டுவது, விவசாய பணிகளுக்கு உதவுவது, அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற சமூக பணிகளை செய்து வருகின்றனர்.
இப்போது கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக V.பழனிராஜா BE., (Enviro Trend Setter (Total Water & Waste Water Solution) பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். இவர் அதாவது பழனிராஜா தேனி மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கியதோடு, பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் அரசியல் வி.ஐ.பி.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விருது வழங்கும் விழா ஏற்பாடுகளை ஹீரோ ஸ்டார் தலைவர் ஹீரோ ஸ்டார் ராஜதுரை சிறப்பாக செய்து இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu