கூடலுார் தி.மு.க நகர செயலாளராக லோகன்துரை மீண்டும் அறிவிப்பு

கூடலுார் தி.மு.க  நகர செயலாளராக  லோகன்துரை மீண்டும் அறிவிப்பு
X

கூடலுார் தி.மு.க., நகர செயலாளர் லோகன்துரை.

கூடலுார் தி.மு.க., நகர செயலாளராக லோகன்துரை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூடலுாரில் அரசியல் பாரம்பரியம் மிகுந்த குடும்பத்தின் வாரிசு லோகன்துரை. இவரது தந்தை சின்னாத்தேவர் தி.மு.க.,வில் கூடலுார் பேரூர் கழக செயலாளராகவும், கூடலுார் பேரூராட்சி தலைவராகவும் இருந்தார். லோகன்துரை கூடலுார் நகர செயலாளராக தற்போது 3வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரது மனைவி பத்மாவதி நகராட்சி தலைவராக (கூடலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது) இருந்து வருகிறார்.

லோகன்துரையின் கடும் முயற்சியால் கூடலுாரில் உள்ள 21 வார்டுகளில் 13 வார்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன் விளைவாக தற்போது மூன்றாவது முறையாக நகர செயலாளர் பதவியை தி.மு.க., இவருக்கு வழங்கி உள்ளது. அவைத்தலைவராக சேகர், துணைச்செயலாளராக கண்ணப்பன், வசந்தகுமார், வானதி ஆகியோரும், நகர பொருளாளராக ஹக்கீம், மாவட்ட பிரதிநிதிகளாக முருகன், முத்து பாண்டியன், சேகர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தி.மு.க. மேலிடம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!