ரயில்வே பயனீட்டாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினராக கே.எஸ்.கே.நடேசன் நியமனம்
தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே.நடேசன்.
தென்னக ரயில்வேயில் அடுத்தடுத்து பயணிகள் வசதிக்காக செய்ய வேண்டிய வேலைகள், பயணிகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க பயனீட்டாளர்கள் ஆலோசனைக்குழு நியமிக்கப்படுவது வழக்கம். இக்குழுவில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இருப்பார்கள். வணிகர்கள் சார்பில் தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே., நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டு இந்த பதவி வகிப்பார். தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத் பரிந்துரைகளின் கீழ் நடேசனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கே.எஸ்.கே., நடேசன் கூறும்போது
தேனியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் கேட்டுள்ளோம். அதேபோல் தேனியில் இருந்து கர்நாடகா, ஆந்திராவை இணைத்து ரயில் கேட்டுள்ளோம். இதற்கு முதல் கட்டமாக தேனி- மதுரை அகல ரயில் தடத்தை மின்தடமாக மாற்ற வேண்டும். இந்த பணிகளை விரைந்து முடிக்க பரிந்துரை செய்துள்ளோம். அதேபோல் தேனியில் இருந்து சென்னை வரை சரக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம்.
தேனியில் மூடப்பட்டுள்ள ரயில்வே பயணிகள் புக்கிங் ஸ்டேஷனை மீண்டும் திறக்குமாறு வலியுறுத்தி உள்ளோம். தேனி- மதுரை இடையே தற்போது தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டியில் மட்டும் ரயில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு போல் (மீட்டர்கேஜ் ரயில் வந்த போது 11 இடங்களில் நிறுத்தம் இருந்தது) 11 நிறுத்தங்களிலும் ரயில் நின்று சென்றால் கிராமங்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என வலியறுத்தி உள்ளோம். சென்னை ரயில் இத்தனை நிறுத்தங்களில் நின்று செல்ல வழியில்லை. ஆனால் சாதாரண பயணிகள் ரயில் நின்று செல்ல முடியும். தற்போதைய வழித்தடத்தில் அதற்குரிய அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கம் செய்யப்படவில்லை. அதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu