தேனி அருகே பெண்ணை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய கள்ளக்காதலன் கைது
பெண்ணை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய முத்துச்சாமி.
தேனி மாவட்டம், கூடலுாரில் இருந்து குமுளி செல்லும் ரோட்டோரம் உள்ள தோட்டத்தில் வசிப்பவர் தேஸஸன். இவரது மனைவி நந்தினி. கடந்த மே மாதம் 3ம் தேதி நந்தினியை அவரது கணவன் குத்திக்கொலை செய்து விட்டதாக முத்துச்சாமி என்பவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துச்சாமிக்கும், நந்தினிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முத்துச்சாமிக்கு பெரும் நோய் தொற்று இருந்ததை நந்தினி கண்டறிந்து விட்டார். இதனால் கள்ளக்காதலனை விட்டு விலகி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துச்சாமி தனது ஆசைக்கு இணந்த மறுத்த நந்தினியை கொலை செய்துள்ளார். அந்த பழியை அவரது கணவன் தேஸஸன் மீது போட்டுள்ளார். இதனை கண்டறிந்த போலீசார் முத்துச்சாமியை கொலை வழக்கில் கைது செய்தனர். குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu