தி.மு.க., அ.தி.மு.க.,வில் முக்கிய தலைகள் எஸ்கேப்...
இது பற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: தேனி தொகுதியில் டி.டி.வி., தினகரன் பா.ஜ.க., கூட்டணியில் போட்டியிடுவதால், அவரை எதிர்த்து களம் காண முடியாமல் அ.தி.மு.க.,வில் உள்ள, முக்கிய தலைகள் தலைமறைவாகி உள்ளன. இதே சூழல் தான் தி.மு.க.,விலும் நிலவுகிறது. தி.மு.க.,வில் ஏராளமான பவர் பாயிண்ட்கள் உள்ளன. இந்த பவர் கிரிட்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி இணைத்தால் நிச்சயம் மின்அழுத்த மாற்றத்தால் பவர் கிரிட்களே வெடித்து விடும். அந்த அளவு கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ எச்சரித்தும், ஒன்றும் நடக்கவில்லை என்றே தெரிகிறது. இவர்களின் தேர்தல் பணிகள் எப்படியிருக்கும். இப்போது எப்படியிருக்கிறது என்பதை நாங்களே கவனித்து வருகிறோம் என முக்கிய தி.மு.க., பிரமுகர்களே வேதனையுடன் கூறுகின்றனர்.
தி.மு.க.,வாவது பரவாயில்லை. தேர்தல் பணிகளை பல சுற்று முடித்து விட்டது. பூத் கமிட்டிகளை பலமாக அமைத்து விட்டது. அடித்தள கட்டமைப்பினை மிகவும் வலுவாக வைத்துள்ளது. இதனால் இந்த நிமிடம் வரை அந்த கட்சி தான் தேர்தல் பிரச்சார ரேஸில் முந்தி நிற்கிறது.
அ.தி.மு.க.,வின் நிலை தான் பரிதாபம். முக்கிய தலைவர்கள் எல்லோரும் டி.டி.வி.,யை எதிர்த்து எப்படி களம் காண்பது என்ற தயக்கத்தில் வெளியே வரவேயில்லை. வந்தாலும் போக்கு காட்டி விட்டு சென்று விடுகின்றனர். தினகரன் சைடில் தேர்தல் பிரச்சாரம் கூட பெயரளவிற்கு தான் நடக்கிறது. இப்போது வரை பணம் செலவிடவில்லை. எங்களுக்கு தேர்தல் வேலைகளை பிரித்து வழங்கவில்லை. தேர்தல் வேலை செய்யும் போது, தேவைக்கு பயன்படுத்தக்கூட பணம் தரவில்லை என தினகரன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டே இருகின்றன. இப்படி மூன்று கட்சிகளிலும் சில, சில அதிருப்திகள் இருந்தாலும், ரகசிய உள்ளடி வேலைகளில் தினகரன் எப்படி காய் நகர்த்தி தங்களை வீழ்த்துவாரோ என்பதை கணிக்க முடியாமல் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அச்சத்தில் உள்ளன. காரணம் தினகரன் தீவிரமாக எந்த வேலையும் செய்யவில்லை. அவர் எப்படி தேர்தல் பணிகள் செய்கிறார் என்பதையே கணிக்க முடியவில்லை என்பது தான் இப்போதைக்கு பெரிய திரில் கலந்த சஸ்பெண்ஸ் ஆகவே உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu