கடவுளின் தேசத்து காட்டுமிராண்டிகள் : 2011ல் வாங்கியது மீண்டும் வேண்டுமா?

கடவுளின் தேசத்து காட்டுமிராண்டிகள் :  2011ல் வாங்கியது மீண்டும் வேண்டுமா?
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்.

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். நீங்கள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறீர்கள். நல்ல சூழலை கெடுக்காதீர்கள்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளருமான ச.பென்னிகுயிக் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை மீதும், அதன் பிதாமகர் கர்னல் பென்னிகுயிக் மீதும், அவதூறுச் சேற்றை ஒட்டுமொத்த கேரளமும், வாரி இறைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, நாம் இன்னமும் பொறுமையாகவே இருக்கிறோம். திருப்பி அடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் 10 பிரதான சாலைகளை ஒரு வாரம் இழுத்துப் பூட்டினால், இந்த மலையாள அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்ட முடியும்.

தமிழகம் ஏனோ இன்னும் பொறுமையாகவே இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கம்பம் பள்ளத்தாக்கு கொடுத்த அடியை, மறுபடியும் கொடுத்தாலொழிய, இந்த காட்டுமிராண்டிகள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் கம்யூனிஸ்டுகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்துக் கொள்வதும், கம்யூனிஸ்டுகள் ஆட்சி இருந்தால் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வதுமாக, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார ரீதியான தாக்குதலை தமிழகம் நடத்துவதற்கான காலம் கனிந்து வருவதாகவே நினைக்கிறேன். ரப்பர், மிளகு, ஏலக்காய், தேயிலையை தவிர்த்து,பெரிய அளவிலான விவசாய உற்பத்தி பொருட்களை விளைய வைக்க முடியாத இந்த கேரளா, எல்லாவற்றிற்கும் தமிழகத்தைச் சார்ந்து நிற்கும் இந்த கேரளா, எதற்காக இத்தனை ஆட்டம் ஆட வேண்டும் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், மயிலிறகை கொண்டு பினராயி விஜயனை வருடி விடுவதாகவேத் தோன்றுகிறது. மாநில நலன் என்பது தான் முக்கியமே தவிர, எதற்கும் உதவாத பினராயினுடனான நட்பு எதற்கு தமிழக முதல்வருக்கு என்பது எங்கள் கேள்வி.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், 95 லட்சம் மக்கள் மாண்டு போவார்கள் என்கிற பொய்ப் பிரசாரம் கேரளா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு அது குறித்து ஒரு சிறு துரும்பை கூடக் கிள்ளி போடாதது எங்களை போன்றவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியிருக்கிறது

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை கள்ள மவுனம் சாதிக்கும் நிலையில், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம் பி க்களான ஹைபி இடன், டீன் குறியா கோஸ், காங்கிரஸ் ஆதரவு பெற்ற பிரேமச்சந்திரன், காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அனைத்துக் கட்சி எம்.பிக்களும், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை வேண்டுமென்று நாடாளுமன்ற மக்களவையிலும், மேலவையிலும் உரத்து குரல் கொடுக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சென்ற 40 பேரும் என்னவானார்கள் என்கிற கேள்வி எழுகிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள எம்.பிக்கள் பேசினால், நீங்கள் பேசக்கூடாது என்று தி.மு.கழகம் உத்தரவிட்டிருக்கிறதா என்று நமக்கு தெரிய வேண்டும்.

கடுமையான பிரசாரம் என்று சொன்னால் கூட அது குறைந்த சொல் தான், அந்த அளவிற்கு கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சின்னஞ்சிறு யூ டியூபர்கள் எல்லாம், களத்திலே நின்று விளையாடுவதை பார்த்தால்... தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலையை தேனி மாவட்டத்தோடு சேர்க்காமல் ஓய மாட்டார்கள் போல் தெரிகிறது.

இந்த லட்சணத்தில் நாளொன்றிற்கு பல்லாயிரக்கணக்கான லாரிகளிலே, கேரளாவிற்கு கனிம வளங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறது. கேட்பதற்கு நாதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது.

உடனடியாக கேரள மாநில அரசு youtube பர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும். காங்கிரஸின் காரிய கமிட்டி அதன் எம்.பிக்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையேல் 2011 ஆம் ஆண்டு மூணாறு நகரத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தியதை போல, தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலையிலும் இந்த முறை பெரியாறு அணை காக்க ஊர்வலம் நடத்த வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்படும்.

முல்லைப் பெரியாறு அணை என்பது 999 ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் ஒரு கட்டுமானம் கொண்ட அணை. அதை இடித்துவிட்டு புதிய அணை வேண்டுமென்றால்,எங்களை போன்றவர்கள் இனிமேல் பல விஷயங்களை பற்றி பேசுவதை தவிர வேறு வழியில்லை என்று முடிக்கிறேன் இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!