கேரள இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்துடன் இணைய ஆர்வம்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.
Mullaperiyar Dam Issue - முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் பொய் பிரச்சாரத்திற்கு கேரள அரசு மறைமுகமாக துணை போகிறது. இந்த பொய் பிரச்சார கும்பல் முல்லைப்பெரியாறு அணை குறித்த ஒரு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறது. இந்த பிரச்சாரக்கும்பலுக்கு கேரளாவின் பல்வேறு அமைப்புகள் நிதி உதவியும் வழங்கி வருகின்றன. இதே நிலை நீடித்தால் முல்லைப்பெரியாறு அணை ஒரு நாள் நம் கையை விட்டு போய் விடும் என தமிழக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எனவே கேரளாவின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டத்தில் வசிக்கும் 95 லட்சம் மக்களை ஒருங்கிணைக்க பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணை தமிழகத்துடன் தான் இணைந்திருந்தது. கேரள பிரிவினையும் போது, தமிழர்கள் வசிக்கும் பகுதி தவறுதலாக கேரளாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என வரும் 17ம் தேதி போராட்டம் தொடங்க உள்ளனர்.
இந்த தாலுகாக்களில் மலையாளிகள் வசிக்கும், அடிமாலி, வாகமண், முண்டகயம், உடும்பஞ்சோலை ஆகிய 18 கிராமங்களை கேரளாவுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு தேனி மாவட்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களின் ஒருவரான டாக்டர் பாஸ்கரனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த ஆதரவினை பார்த்து வியந்த கேரள பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த விஷயத்தை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த பிரச்சினையை கிளப்பிய அன்வர்பாலசிங்கத்திடம் பேட்டி கேட்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu