கேரளா இடுக்கி அணை தண்ணீர் தமிழக வைகை அணைக்கு கிடைக்குமா ?

கேரளா இடுக்கி அணை தண்ணீர் தமிழக வைகை அணைக்கு  கிடைக்குமா ?
X

சேலம் உருக்காலையில் சீனியர் டெபுடி ஜெனரல் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொறியாளர் வேலுச்சாமி தேனி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

இடுக்கி அணை தண்ணீரை சுரங்கம் அமைத்து கம்பத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஓய்வு பெற்ற பொறியாளர் மனு அளித்தார்

கேரளாவில் வெள்ளச் சேதத்தை தவிர்க்க இடுக்கி அணையில் இருந்து கம்பம் மொட்டையாண்டி கோயில் வரை சுரங்கம் அமைத்து தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனு அளிக்க வந்த குழுவைச் சேர்ந்த சேலம் உருக்காலையில் சீனியர் டெபுடி ஜெனரல் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொறியாளர் வேலுச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

இடுக்கி அணையில் இருந்து தமிழ்நாட்டில் கம்பத்தில் உள்ள மொட்டையாண்டி கோயில் வரை மலையில் சுரங்கப்பாதை அமைத்து, அதன் மூலம் தண்ணீர் கொண்டு வர வேண்டும். அப்படி சுரங்கப்பாதை மூலம் மொட்டையாண்டி கோயிலுக்கு கொண்டு வரப்படும் இடுக்கி அணை தண்ணீர் மொட்டையாண்டி கோயிலில் 732 மீட்டர் அழுத்தத்துடன் சீறிப்பாயும். இந்த நீர் அழுத்தம் மூலம் மின்சாரம் எடுக்கலாம். மின்சாரம் எடுத்த பின்னர் உபரி நீரை 18ம் கால்வாய் வழியாக வைகை அணைக்கு கொண்டு போய் சேர்க்கலாம்.

கேரளாவில் பலத்த மழை பெய்து இடுக்கி அணையில் தண்ணீர் அதிகம் வரும் போது அங்கு ஏற்படும் வெள்ளத்சேதத்தை இந்த திட்டத்தின் மூலம் தடுக்கலாம். தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் மிகவும் அதிகளவு செழிப்பாக இருக்கும். கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திலும் வெள்ள அபாயத்தை முற்றிலும் தடுக்க முடியும்.

இடுக்கி அணை முழுக்க, முழுக்க மின்சார பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. எந்த அணையில் எவ்வளவு மின்சாரம் தயாரிப்பது, தண்ணீரை எப்படி பங்கிடுவது என இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக நான் கேரள பொதுப்பணித்துறைக்கு இ-மெயி்ல் அனுப்பி இருந்தேன். திட்டத்திற்க சாதகமாக பதில் அனுப்பி உள்ளனர். தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். திட்டம் குறித்து விளக்கினோம். அவரும் திட்டம் சாத்தியமானது என்றால் அரசுக்கு பரிந்துரைப்பதாக கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கும் முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி