கருணாநிதி பிறந்தநாளில் தொடர் ஓட்ட போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

கருணாநிதி பிறந்தநாளில்  தொடர் ஓட்ட போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு
X

மதுரை குடிநீர் திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வலியுறு்த்தி கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.

மதுரை குடிநீர் திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வலியுறுத்தி தொடர் ஓட்ட போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்

தேனி மாவட்ட பாரதிய கிஸான் சங்க தலைவர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் சிவனாண்டி, சத்திரப்பட்டி பாசன விவசாயிகள் சங்க தலைவர் கருப்பசாமி உட்பட பலர் கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவை சந்தித்தனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காத வகையில், மாற்று வழிகளில் செயல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூன் 3ம் தேதி கூடலுார் குறுவனத்து பாலத்தில் இருந்து வைகை அணை வரையில் தொடர் ஓட்டப்போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!