கர்நாடகா நிலவரம்: சித்தராமையா நம்பிக்கை

கர்நாடகா நிலவரம்: சித்தராமையா நம்பிக்கை
X

சித்தராமையா (பைல் படம்).

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது பா.ஜ.கவிற்கு சற்று லேசான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக உள்ளதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மோடி அலை எங்கும் வீசவில்லை என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சித்தராமையா, "கர்நாடகாவில் மக்களின் மனநிலை பா.ஜ.கவுக்கு எதிராக உள்ளது. மக்கள் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மோடி அலை எங்கும் வீசவில்லை. வாரம் வாரம் மோடியும் அமித்ஷாவும் வந்து செல்கிறார்கள். காங்கிரஸை வீழ்த்த எல்லா வழிமுறைகளையும் பா.ஜ.க கையாண்டு வருகிறது. பா.ஜ.கவுக்கு என்னைக் கண்டால் பயம். அதனால் சோமண்ணாவை எனக்கு எதிராக நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால் வருணா மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள். இதை எல்லாம் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும். 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸ் நிச்சயம் தனித்து ஆட்சியைப் பிடிக்கும்" என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..