கம்பம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கம்பம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை   தாக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X
கம்பம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரை தாக்கிய இரண்டு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

கம்பம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ரவிக்குமாரை தாக்கிய இரண்டு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமார் மீது கடந்த ஜனவரி 7ம் தேதி கடுமையாக தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக வாசித், 35 சதாம் உசேன், 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று கலெக்டர் முரளீதரன் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.

Tags

Next Story
ai as the future