தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா: 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி தொடங்கி வைத்தார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை சார்பில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி மாலை அணிவித்து வணங்கினார்.
பொதுச்செயலாளர் ஆனந்தவேல், துணைத்தலைவர் பி.பி.கணேஷ், பொருளாளர் பழனியப்பன், மற்றும் கே.கே.ஜெயராம்நாடார் உட்பட 12 ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து நகர் பகுதியில் உள்ள அனைத்து கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பள்ளியில் காலை 6.30 மணிக்கு மாரத்தான் ஓட்டம், ஊர்வலம், ரத்ததானமுகாம், கருத்தரங்கம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என அதிகாலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருந்தன. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி விழா நிகழ்ச்சிகளை பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் நடந்தது. அதேபோல் சமதர்மபுரம் நாடார் சங்கம், பாரஸ்ட்ரோடு நாடார் சங்கம், ஜிஹைச் ரோடு நாடார் சங்கம் சார்பிலும் அன்னதானம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், அன்னதானம் நடந்தன. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானத்தில் பங்கேற்றனர்.
சி.பா.சிவந்திஆதித்தன் நற்பணி மன்றம் சார்பில், தேனி அல்லிநகரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெய்முருகேஷ் புத்தாடை, இனிப்புகள் வழங்கினார். மாவட்ட பொருளாளர் வெல்டிங்குமார், ஆயுட்கால உறுப்பினர்கள் ராஜதுரை, மாடசாமி, வேல்பாண்டி, தேவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu