கல்லாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் வருமா..?
குடிநீர் திட்டம் (கோப்பு படம்)
கேரள மாநிலம், கல்லாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு செய்திருந்தார். இதற்காக அனுமதி கேட்க அப்போதைய மதுரை மேயர் பட்டுராஜனை கேரளாவிற்கு அனுப்பி அப்போதைய கேரள முதல்வரை சந்தித்து இத்திட்டத்திற்கு அனுமதி வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தார்.
அதன் பின்பு கோட்டயத்தில் பி.சி.சாக்கோ சிலை திறப்பு விழாவிற்கு சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு மேடையில் கேரள முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கும் போதே, கல்லாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் தாருங்கள் என பேசினார். எம்.ஜி.ஆர் சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் கல்லாறு- மதுரை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால் அதன் பின்பு அவரது வழிகாட்டுதல்படி ஆட்சி நடத்தியவர்கள் முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கல்லாறு- மதுரை குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கவே இல்லை. மாறாக முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் எடுக்க 1300 கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த தொடங்கி விட்டனர்.
இது குறித்து குறைந்தபட்சம் மக்களிடம் கருத்து கேட்பாவது நடத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. முந்தைய அ.தி.மு.க., அரசு அவசர கோலத்தில் நடத்திய திட்டத்தை தி.மு.க.,வும் தொடர்கிறது. இதனால் என்னென்ன பாதிப்புகள் வர உள்ளதோ தெரியவில்லை.
விவசாயிகளின் அச்சத்தை எந்த அரசுகளும் கண்டுகொள்ளவில்லை என தேனி மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே கருத்தை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கமும் இதர நிர்வாகிகளும் தெரிவித்திருந்தனர். தேனி மாவட்ட பாரதீய விவசாய சங்கமும் இந்த கருத்தை பதிவு செய்திருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu