கடமலைக்குண்டு ராஜமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கடமலைக்குண்டு ராஜமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
X

கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி அருகே  ராஜமுனீஸ்வரர் கோயிலில் வழிபடும் பொதுமக்கள்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு ராஜமுனீஸ்வரர் கோயி்லில் கும்பாபிஷேகம் நடந்தது.

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. விழாவில் சர்க்கரை பொங்கல், அன்னதானம், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து வருஷநாடு, மயிலாடும்பாறை, கண்டமனூர், கடமலைக்குண்டு, குமணன்தொழு, கரட்டுப்பட்டி, மேலப்பட்டி, உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் வாய்க்கால்பாறை சதுரகிரி அன்னதான கமிட்டி நிர்வாகிகள், சீலமுத்தையா கோவில் அன்னதான கமிட்டி நிர்வாகிகள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான சிறப்பு அழைப்பாளர்களாக சிவராமன், காமாட்சி, சதுரகிரி பக்தர் குழுபூசாரி கருப்பசாமி, ஈஸ்வரன், முருகன், டாக்டர் தங்க வணங்காமுடி, கேட்கே கணினி குமரன், குறிஞ்சி மாடசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது