பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

ஆண்டிபட்டி பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி பகுதி பள்ளி மாணவ, மாணவிகள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செயல்படும் சித்த மருத்துவப்பிரிவு சார்பில், கொரோனா முதல் அலை தொடங்கிய போதே, கபசுர குடிநீர் விநியோகம் தொடங்கியது. தினமும் மருத்துவமனைக்கு வரும் அத்தனை பேருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று உருவாகி உள்ளதால், தேனி மாவட்டத்தில் இதன் பரவலை தடுக்கும் பொருட்டு, சித்த மருத்தவ பிரிவு டாக்டர்கள், அலுவலர்கள் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், சாலையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags

Next Story