வைகை ஆற்றில் குதித்த உசிலம்பட்டி பெண் உடலை தேடும் போலீசார்

வைகை ஆற்றில் குதித்த  உசிலம்பட்டி பெண் உடலை தேடும் போலீசார்
X

வைகை ஆறு பைல் படம்.

வைகை ஆற்றில் குதித்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த பெண் உடலை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறுக்கம்பட்டியை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவரது மனைவி சித்ரா (வயது 45.) இவர் வைகை அணை அருகே உள்ள குரியம்மாள்புரம் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை வீட்டில் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் இவரை திடீர் என காணவில்லை. வைகை அணை பெரியபாலத்தில் இருந்து சித்ரா ஆற்றுக்குள் குதித்ததை சிலர் பார்த்துள்ளனர். கரையில் கிடந்த செருப்பினை வைத்து குதித்தது சித்ரா தான் என்பதையும் உறுதி செய்தனர். ஆண்டிபட்டி தீயணைப்பு படையினர் சித்ராவின் உடலை தேடி வருகின்றனர். வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs