தேனி ஊர்க்காவல்படையில் சேர விருப்பம் உள்ளதா?

தேனி ஊர்க்காவல்படையில் சேர விருப்பம் உள்ளதா?
X

பைல் படம்.

தேனி ஊர்க் காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, சமூக சேவையில் விருப்பம் உள்ள, 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தேனி ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம். சேர விருப்பம் உள்ளவர்கள் தேனி எஸ்.பி., அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிக்கு பின்னர் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 5 நாட்கள் வேலை வழங்கப்படும். வேலைநாள் ஒன்றுக்கு சம்பளம் மற்றும் படித்தொகை 560 ரூபாய் வழங்கப்படும் என தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture