தமிழக முதல்வருக்கு நன்றி : இங்கிலாந்து நாட்டு எம்.பி...!

தமிழக முதல்வருக்கு நன்றி :  இங்கிலாந்து நாட்டு எம்.பி...!

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த ஊரான கேம்பர்லீ உள்ள தொகுதியின் சர்ரேவில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஆல் பிங்கர்டன்.

இங்கிலாந்து பாரளுமன்றத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் புகழ் பற்றி பேசிய இங்கிலாந்து எம்.பி.,தமிழக முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு கட்டி ஜந்து மாவட்ட மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி அன்று இங்கிலாந்து பாரளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.

நடந்து முடிந்த இங்கிலாந்து பாரளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த ஓரு வாரமாக நடைபெற்று வரும் பாரளுமன்ற கூட்டதொடரில் புதிதாக பதவி ஏற்ற பாரளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் முதல் பாரளுமன்ற பேச்சை தொடங்கினார்கள். கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த ஊரான கேம்பர்லீ உள்ள தொகுதியின் சர்ரேவில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஆல் பிங்கர்டன் தனது பாரளுமன்ற உரையில்,

‘முல்லை பெரியாறு அணைக்கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்’ புகழை பாரளுமன்றத்தில் ஓலிக்கச் செய்தார். மேலும் அவர் கூறுகையில் “ முல்லை பெரியாறு எனும் அணையினைக்கட்டி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நகரில் இருந்து நான் தேர்ந்தெடுக்கபட்டுள்ளேன். கர்னல் ஜான் பென்னிகுக் இறந்து 100 வருடங்கள் கடந்தும் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு எனும் மாநிலத்தில் இன்றும் அவரை கொண்டாடுகின்றனர். அங்குள்ள தமிழக விவசாயிகள் தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கு பென்னிகுயிக் என பெயர் வைக்கிறார்கள்;

அவரை தலைமுறை தலைமுறையாக கௌரப்படுத்திறார்கள். ஆனால் அவரின் நாடான இங்கிலாத்தில் அவரை யாருக்கும் தெரியாது என்பது வேதனை. அவரை உரிய முறை கவுரப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அதற்காக முயற்சியே நான் தொடர்வேன் என்றார்.

தொடர்ந்து தமிழக அரசு வழங்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை முன் நின்று கொண்டு அவர், இந்த சிலை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி எனவும் கூறினார்.

Tags

Next Story