பஞ்சாப் அறுவடை திருநாளில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை

பஞ்சாப் அறுவடை திருநாளில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை
X

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த பூங்கா முகப்பு.

பஞ்சாப் மாநிலத்தில் அறுவடை திருநாள் கொண்டாடிய மக்களை ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஜெனரல் டயர் சுட்டு வீழ்த்தினார்

அக்காலகட்டம் பிரிட்டிஷ் அரசு ஆடிகிடந்தது. காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார். அது உலகெங்கும் ஆட்சிமாற்றத்துக்கு போராடும் மக்களுக்கு நம்பிக்கை கீற்று தெரிந்தது. உலகை கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம் அது. உலகை தன் வலுவான கடற்படையாலும், சூழ்ச்சியாலும் ஆண்டு கொண்டிருந்த ஏகாதிபத்திய பிரிட்டிசார் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலைமையில் குழுபோட்டு ஆலோசித்தனர். முடிவில் அது ரவுலட் சட்டமாயிற்று.

கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் வடிவம் அது. அரசுக்கு எதிரானவன் என்ற சந்தேகம் மட்டும் போதும். காவல்துறை அவன் தலைவிதியினை இஷ்டபடி எழுதலாம். நீதிமன்றம் எல்லாம் தலையிட முடியாது. ஜாமீன், வழக்கு எல்லாம் கனவிலும் நடக்காது.

பிரிட்டிஷ்காரர்களள் அப்படித்தான் எல்லாம் சட்டமியற்றி விட்டுத் தான் செய்வார்கள், அவர்கள் வழக்கம் அது. புல்லினை பிடுங்க வேண்மென்றாலும் சட்டம் என்ன சொல்கிறது என பார்த்து விட்டு தான் செய்வார்கள்..அப்படி ஒரு சட்டம் இல்லாவிட்டால் இயற்றிக்கொள்வார்கள். இந்நாளில் இஸ்ரேலிய சட்டம், ஜெயவர்த்தனேவின் பாதுகாப்பு சட்டம், இந்தியாவின் பொடோ சட்டம் என எல்லாவற்றிற்கும் இந்த ரவுலட்சட்டம் தான் தாய். இன்று எல்லா நாடுகளிலும் இருக்கும் தீவிரவாத தடைச்சட்டம் எனும் மிகவலுவான சட்டத்தின் மூலம் அதுதான்.

அந்நாளில் இந்திய விடுதலை வேட்கையை முற்றாக முடக்கிப்போடும் சட்டமாக அது கொண்டு வரப்பட்டது. நாடு முழுக்க அச்சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகள் வெடித்த பொழுது அது பஞ்சாபிலும் உணர்ச்சி கனல் ஊட்டிற்று. இன்றுபோல் அன்றும் பஞ்சாபியருக்கு அறுவடை திருவிழா. அந்த பைசாகி எனப்படும் பண்டிகை அன்றுதான் மக்கள் அந்த அமிர்தசரஸ் பூங்காவில் மாலையில் கூடினர். விழாக்காலம் என்பதால் பெருங்கூட்டம், கிட்டதட்ட 10000 பேர் கூடியிருக்கலாம் என்பது கணக்கு.அந்த பூங்காவின் பெயர்தான் ஜாலியன் வாலா பாக். நாலுபக்கம் மதில் கொண்ட பூங்கா அது, நுழைய ஒரு குறுகிய வாயில்தான் உண்டு. அரசர் காலத்தின் தொடர்ச்சியான வரலாற்று திடல்.

அன்றைய அந்த பிரதேச கமிஷனர் பெயர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், ஒரு காவல் படையோடு வந்தார். அதில் 50 இந்தியரும் உண்டு. வந்தவர் எச்சரிக்கை கூட கொடுக்காமல் துப்பாக்கியால் சுடச் சொன்னார். மக்கள் செத்து மடிந்தனர், வாசலை அடைத்து கொண்டு சுட்டதால் சுவர் ஏறி குதித்து நெரிசலிவ் சிக்கி, கிணற்றில் தவறி விழுந்து, மிதிபட்டு என கிட்டதட்ட 1500க்கு மேற்பட்டவர் உயிரிழந்தனர், நிதானமாக கடமையாற்றிய ஜெனரல் டயர், தோட்டாவும், பீரங்கி குண்டுகளும் தீரும் அளவு சுட்டார்.

அவை தீர்ந்ததால் மீதி மக்கள் கொல்லபடவில்லை எனினும், மாலை ஆனதால் ஊரடங்கு உத்தரவு என சொல்லி திறந்தவெளி சிறை வத்து காலையில்தான் மக்களை வெளியில் விட்டார் டயர். அவரது கடமை உணர்ச்சி அப்படி. அதாவது சட்டப்படி சுட மட்டும் செய்தாராம். கத்தியால் குத்தவில்லையாம், சட்டப்படி ஊரடங்கு உத்தரவில் அவர்களை பிணகுவியல் நடுவே அழவும் வைத்தாராம். சுற்றி சொந்தம் இறந்து கிடக்க,நடுவிலிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்? அங்கே பெண்களும் குழந்தைகளும் கூட ஏராளம்.

செத்தது 379 பேர் என சொன்னது பிரிட்டன் அரசு. ஆனால் கிட்டதட்ட 2000 பேர் இறந்திருக்கலாம் என்பது உண்மை. இந்த கொடுமை நடந்த நாள் ஏப்ரல் 13, 1919. இந்திய சுதந்திர வரலாற்றில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு எதிராக வங்க நவாப், கட்டபொம்மன் என பலரின் படைகள் களம் இறங்கின. நாடு முழுவதம் சுதந்திர தீ எரிந்தது.

நாடு கொந்தளிக்க தொடங்கியதால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பணிமாற்றி லண்டனுக்கு அனுப்பியது. அங்கு அவர் பெரும் ஹீரோ என கொண்டாடபட்டார். பிரிட்டிஷார் அவரை உள்ளூர ரசித்தனர். லண்டன்வாசிகள் இப்படித்தான் சுதந்திரம் கேட்பவர்களை கொல்ல வேண்டும். நாம் ஆள, பிறரை கொல்ல பிறந்தவர்கள் என அறுதியிட்டு சொன்னது. அவரை கொண்டாடியது பிரிட்டன். எந்த பெரும் ஆணவ கொலைகாரனையும் பழிவாங்க காலம் ஒருவனை உருவாக்கும் அல்லவா? இறைவனின் விதி அது. அப்படி உருவானார் பஞ்சாப்பின் உத்தம்சிங். தொடர்ந்த தேடுதலில் 21 ஆண்டுகளுக்கு பின் உத்தம்சிங்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

லண்டனின் பெரும் ஹீரோவான கொடியவர் டயர் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தம்சிங்கும் கலந்தார். டயர் கூட்டத்தில் உரையாற்றினார் ஆப்ரிக்க பிரிட்டன் காலனி நாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பினை அடக்க என்னைப்போல ஆட்கள் அவசியம். அன்று அமிர்தசரஸில் இன்னும் ஆயுதம் இருந்திருந்தால் ஒருவரையும் விட்டிருக்க மாட்டேன், என் கடமையினை முழுமையாக செய்யாதற்கு வருந்துகிறேன்(எப்படி?). இன்னுமோர் வாய்ப்பு ஆப்ரிக்காவில் அரசு தருமா?” என இன்னும் வீரமுழக்கமிட்டு இறங்கினார் டயர். கொஞ்சம் கூட அத்தனை பேரினை, அப்பாவிகளை கொன்ற வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லை, அத்தனை அகம்பாவம்.

அவன் முன்னால் சென்றான் உத்தம் சிங், தன் கையில் உள்ள புத்தகத்தை பிரித்தான், உள்ளே இருந்து துப்பாக்கி எடுத்தான்,”இன்னொரு வாய்ப்பு தரமாட்டோம்” என சொல்லி சுட்டார், இன்னும் இருவருக்கும் குண்டு பாய்ந்தது. இறந்து வீழ்ந்தார் கொடியவர் டயர். எங்கும் ஓடாமல் அமைதியாக நின்றார் உத்தம்சிங், மெதுவாக புன்னகைத்தபடி கூறினார் , ” உன் பெயர் என்ன என்றதற்கு? ராம் முகம்மது சிங் ஆசாத். நான் ஒரு இந்தியன், இந்த டயரால் கொல்லபட்ட மக்களின் ஆன்மா, நான் என் கடமையினை முடித்து விட்டேன், இனி என்ன மரணம் தானே, கொடுங்கள்” ஒரு புத்தகத்தின் உள்பக்கத்தை வெட்டி துப்பாக்கி மறைத்து, கைகளில் கொண்டு, பாதுகாப்பான அந்த மண்டபத்தில் நுழைந்தார் உத்தம்சிங்.

தன் தலைநகரிலே புகழ் மிக்க(?) டயரினை ஒரு இந்தியன் கொன்றதை வெள்ளையனால் தாங்க முடியவில்லை. எப்படியாவது உத்தம்சிங் ஒரு மனநிலை சரியில்லாதவர் என நிரூபிக்க படாதபாடு பட்டது பிரிட்டிஷ் அரசு. ஆனால் முடியவில்லை. ஒரு இந்தியன் பிரிட்டிஷ் ஜெனரலை சுட்டது அவனுக்கு அவ்வளவு பெரும் அவமானம். பின்னாளில் கென்னடி கொலையில் கூட, விசாரித்து இந்த சின்ன கொசுவா அமெரிக்க அதிபரை கொன்றது? வெளியில் சொன்னால் அவமானம் அல்லவா? என சொல்லி அந்த கொலைகாரன் ஆஸ்வால்ட்டினை மெண்டல் என தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம். இன்றுவரை கென்னடி கொலை தீர்ப்பு அப்படியானது.

எந்த பைத்தியம் அப்படி மிக சரியாக சுடும் என்பதும் தெரியவில்லை, பிரிட்டிஷார் இறுமாப்பு அப்படி. ஒரு பைத்தியம் இப்படி வந்து கொல்லுமளவிற்கா உங்கள் பாதுகாப்பு இருக்கின்றது? என ஒருநாடும் பதில் கேட்கவுமில்லை என்பது இன்னொரு விஷயம்.உத்தம்சிங்கினை அப்படி பைத்தியமாக்க முயன்ற வெள்ளையன் முயற்சி படுதோல்வி அடைந்தது. பைத்தியம் என உத்தம்சிங் வழக்கறிஞர் நிரூபித்து விட்டால் உத்தம்சிங் வழக்கிலிருந்து தப்பும் வாய்ப்பும் இருந்தது. இந்திய வழக்கறிஞர்கள் அவரிடம் சொல்லியும் பார்த்தனர்.

ஆனால் உத்தம்சிங்கிற்கும் அடிபணிந்து வாழ விருப்பமில்லை. சிங்கமாகவே இறந்தார். ஒரே ஒரு குரல் மிக தைரியமாக உத்தம்சிங் செயலினை வரவேற்றது. அது நேதாஜியின் குரல். நேரு உத்தம்சிங்கினை புகழ்ந்த பொழுது இந்தியா சுதந்திரம் பெற்று 15 வருடம் தான் ஆகி இருந்தது. 1940ல் உத்தம்சிங் தூக்கிலிடப்பட்டு லண்டனில் புதைக்கப்பட்டார். பின்னாளில் இந்திராவின் இந்திய கோரிக்கைபடி அவரது எலும்புகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, நினைவுச் சின்னம் எழுப்பபட்டது.

இந்திய சுதந்திர பொன்விழாவினையொட்டி இந்தியா வந்த அரசி எலிசபெத் கணவன் எடின்பரோவுடன் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அந்த கல்வெட்டினை பார்த்து, 379பேர் இறந்திருக்க மாட்டார்கள், எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக சொல்லியிருக்கலாம் என எடின்பரோ கூறியது சர்ச்சையானது. 2000 பேர் செத்ததை 379 என மறைத்ததே கொடுமை. இதில் இவர் வேறு தங்களை தற்காத்து கொண்டிருந்தார். ஜாலியன் பூங்கா போல பல தியாகங்கள் நிறைந்தது இந்திய வரலாறு. இன்று வைசாகி எனும் அறுவடை நாள். பஞ்சாபியர்களுக்கு நாமும் வாழ்த்துகளை நன்றியோடு சொல்லலாம். அதே நேரம் அவர்கள் பட்ட ரத்த வரலாற்றின் உச்சமான ஜாலியன் வாலாபாக்கின் குருதி நொடிகளையும் நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்ததலாம்.

Tags

Next Story
ai solutions for small business