பலநுாறு பேருக்கு போலி பட்டா வழங்கல்: சாதாரண அதிகாரிக்கு ஒரு கோடியில் வீடு

பலநுாறு பேருக்கு போலி பட்டா வழங்கல்: சாதாரண அதிகாரிக்கு ஒரு கோடியில் வீடு
X
பல கிராமங்களை சேர்ந்த பல நுாறுபயனாளிகளுக்கு போலி பட்டா வழங்கிய விவகாரம் தற்போது விஸ்வரூம் எடுத்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் பலநுாறு ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு போலி பட்டா போட்டுக் கொடுத்த விவகாரம் கொந்தளித்துக் கொண்டு உள்ள நிலையில், பொதுமக்கள் பலநுாறு பேருக்கு போலி பட்டா கொடுத்த விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் உட்பட பல வி.ஐ.பி.,க்களுக்கு பலநுாறு ஏக்கர் அரசு நிலத்திற்கு பட்டா வழங்கி தானம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆறு பேர் வரை சஸ்பெண்ட் ஆகி உள்ளனர். இன்னும் சிலர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இதற்கிடையில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் நடத்தி வரும் விசாரணையில் அடுத்த பூதம் கிளம்பி உள்ளது. தேவதானப்பட்டி பிர்க்காவில் சர்வேயராக பணிபுரிந்த ஒரு அதிகாரி, சில்வார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வைகை அணை, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி, ஏ.வாடிப்பட்டி, டி.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி உட்பட பல கிராமங்களை சேர்ந்த பலநுாறு பேருக்கு போலி பட்டா போட்டு கொடுத்துள்ளார். சில்வார்பட்டியில் ஒரு தெருவினை தனியாருக்கு போலி பட்டா போட்டு கொடுத்துள்ளார். இந்த வழக்கு தற்போது கோர்ட்டிற்கு சென்றுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரி வீடு மட்டும் ஒரு கோடி ரூபாயில் கட்டி உள்ளார். பல கோடிகளுக்கு அசையும், அசையா சொத்துக்களை சேர்த்துள்ளார். இவர் செய்த முறைகேடுகளை பற்றி பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் பல அதிகாரிகள் இதில் சிக்குவார்கள் என தேனி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil