பா.ஜ.க.,வுக்கு சாதகமாக உள்ளதா? நெல்லை காங்கிரசார் அதிர்ச்சி

பா.ஜ.க.,வுக்கு சாதகமாக உள்ளதா? நெல்லை காங்கிரசார் அதிர்ச்சி
X

பைல் படம்

நெல்லை தொகுதி பா.ஜ.க.,வுக்கு சாதகமாக உள்ளதாகவும், வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதே காரணம் என்றும் காங்., தரப்பில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் என்பவர் களம் இறக்கப்படுவதாக முன்னதாகவே தகவல் கசிந்தது.

இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகி இருந்தனர். பாரதிய ஜனதா மண்ணின் மைந்தரான நைனார் நாகேந்திரனை வேட்பாளர் ஆக்கியது போல் காங்கிரசும் நெல்லை மாவட்டத்துக்காரரை வேட்பாளராக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இத்தனை நாட்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துக்காரரான பீட்டர் அல்போன் தான் வேட்பாளர் என்று பலரும் சொல்லி வந்த நிலையில் அவரும் ஓரம் கட்டப்பட்டிருப்பது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நெல்லை தொகுதியில் போட்டியிட 60-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை கட்சி தலைமையிடம் தாக்கல் செய்த நிலையில் எதையுமே பரிசீலனை செய்யாமல் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பால் கொதித்துப் போயிருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

பாரதிய ஜனதாவின் வெற்றி கடினமாக இருந்த நிலையில் அவர் உள்ளூர் வேட்பாளர் என்ற ஒரே அம்சத்தை வைத்து அவர் எளிதில் வெற்றி பெற்று விடுவார். அதிமுகவிலும் வெளியூர்க்காரர்களை வேட்பாளராக இருந்து இருப்பதால் பாஜகவினருக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது. அதற்கு காங்கிரஸ் மேலிடம் ஏன் வழி செய்து கொடுத்தது? என்பது தான் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!