கட்சிக்கும் ஆட்சிக்கும் சங்கடம் உருவாக்கி விட வேண்டாம்: கட்சித்தலைமை கட்டளை
தமிழக அரசியல்களத்தில் அண்ணாமலை அடித்து ஆடத்தொடங்கி உள்ளார். அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துகளும் சிக்சர்களாக பறக்கின்றன. எனவே அண்ணாமலையை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலினும் முழு வீச்சில் தயாராகி விட்டார். கலைஞரிடம் அரசியல் பாடம் படித்தவன் நான், அவரது ரத்தம் நான் என்பதை ஒவ்வொரு நொடியும் முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலினின் ஒவ்வொரு நிகழ்வும் அணுகுமுறையும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கத்தான் செய்கிறது. ஆட்சி நிர்வாகத்தை சீரமைப்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் கட்சியினர் மீதும் ஒரு கண் வைத்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில், தன் கட்சி நிர்வாகிகள் சிறிய தவறு செய்தால் கூட சோசியல் மீடியாக்கள் அதனை ஊதிப்பெரிதாக்கி விடும் என திடமாக நம்புகிறார்.
இன்று பிரிண்டிங் மீடியா, விஷூவல் மீடியாக்களை விட சோசியல் மீடியாக்களில் தான் பெரும் போர் நடந்து வருகிறது. எனவே தங்கள் கட்சி நிர்வாகிகள் யாராலும் தனக்கோ தனது அரசுக்கோ எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தன் கட்சி மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மூலம் கட்சியின் அத்தனை நிர்வாகிகளிடமும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ சங்கடம் ஏற்படும் வகையில் எந்த ஒரு விஷயத்தையும் செய்து விடாதீர்கள் என கடுமையான உத்தவை பிறப்பித்துள்ளார். தி.மு.க கட்சி தலைமை தங்களை கிடுக்கிப்பிடி போட்டு வருவதாக நிர்வாகிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu