திருப்பூர்- திருச்சி இடையே எலக்ட்ரிக் பஸ் அறிமுகம்
திருப்பூர்- திருச்சி இடையே இயக்கப்படும் குளுகுளு எலக்ட்ரிக் பஸ்.
திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Nuego என்கிற நிறுவனம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பேருந்துகளை குறைவான கட்டணத்தில் இயக்கி வருகிறார்கள். தற்பொழுது திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7.20 க்கு புறப்பட்டு, புஷ்பா தியேட்டர் 7.25 மற்றும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் 7.30 ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் 10.25, தில்லை நகர் 10.30, மத்திய பேருந்து நிலையம் 10.35, திருச்சி விமான நிலையம் 10.50 மணிக்கு சென்றடைகிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு 9.40 மணி அளவில் மேல் சொன்ன அதே வழியில் வந்தடைகிறது.
டிக்கெட் கட்டணம் தேர்ந்தெடுக்கும் இருக்கையை பொறுத்து ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரை நிர்ணயத்துள்ளார்கள். அவர்களுடைய வெப்சைட்டில் நேரடியாக புக் செய்யும் பொழுது 100 ரூபாய் வரை டிக்கெட் தள்ளுபடி வழக்குகிறார்கள். Redbus, make my trip போன்ற இணையதளத்திலும் டிக்கெட் புக்கிங் ஏற்றுக்கொள்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu