தேனி மாவட்ட கண்மாய், குளக்கரைகளில் பனை விதை நடும் பணிகள் தீவிரம்

தேனி மாவட்ட கண்மாய், குளக்கரைகளில் பனை விதை நடும் பணிகள் தீவிரம்
X

தேனி  மீறுசமுத்திரம் கண்மாய் கரையில் பனை விதை நடவு செய்யும் சமூக ஆர்வலர்கள்.

தேனி மாவட்டத்தில் கண்மாய், குளக்கரைகளில் பனைவிதை நடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் பனைவிதைகளை நடவு செய்யுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பனை விதைகளை நடவு செய்ய இலக்கும் நிர்ணயித்துள்ளது. இப்போது மழைக்காலம் என்பதால் பனை விதைகளை நடவு செய்தால் எளிதில் முளைத்து விடும். எனவே இப்போது பனைவிதைகளை நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளக்கரைகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள சமூக அமைப்புகளின் சார்பில் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சமூக அமைப்புகளில் டாக்டர்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் குளக்கரைகளில் பனைவிதைகளை நடவு செய்து வருகின்றனர். தேனி மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் முடிந்த அளவு நாங்களும் உதவிகள் செய்து வருகிறோம் என தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story