தீக்காயம் அடைந்தாலும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் கை கொடுக்கும்
தேனி மாவட்டத்தில், இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில், தேனி மாவட்டத்தில், இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் பேசியதாவது: இந்த திட்டம் கடந்த 18ம் தேதி முதல், தேனி மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இதுவரை 25 பேர் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர். காயமடைந்தவரின் விவரங்களை, மருத்துவர் பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில் பணம் அனுமதியாகி விடும். எனவே ரோடு விபத்தில் சிக்கியவர்களையும், வாகனம் தீ பிடித்து விபத்தில் சிக்கியவர்களையும், இதர தீ விபத்தில் சிக்கியவர்களையும் இந்த திட்டத்தில் சிகிச்சை அளித்து குணப்படுத்த அரசு கை கொடுக்கும்.
ஆனால் தற்கொலைக்கு முயன்றவர்கள், தற்கொலை செய்து கொள்ள விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, இந்த திட்டத்தில் காப்பாற்ற அரசு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உதவி செய்யும். அதிகாரிகள் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu