தேனி மாவட்டத்தின் மண்வளம் ‛காலி’..! மண்வளம் காக்க வேளாண்துறை அறிவுரை..!
தேனி அறிவியல் வேளாண் மையம் (கோப்பு படம்)
பயிர்களை சாகுபடி செய்ய வேண்டுமானால் வேளாண்மைத்துறை பரிந்துரை செய்த உரங்களை சாகுபடி செய்வதை தவிர வேறு வழியில்லை என வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மண்வள பரிசோதனை ஆண்டுதோறும் நடக்கும். தவிர விவசாயிகளின் நிலங்களில் உள்ள மண்வளம் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு மண்வள பாதுகாப்பு அட்டைகள் வழங்கப்படும். அந்த அட்டையில் விவசாயி நிலத்தில் எந்த சத்து அதிகமாக உள்ளது?
எந்த சத்து குறைவாக உள்ளது? எது போதுமான அளவு உள்ளது? இந்த சத்துக்குறைப்பாட்டினை சரி செய்ய விவசாயிகள் தங்கள் நிலங்களில் என்ன சத்துக்கள் நிறைந்த உரங்களை இட்டு சாகுபடி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டும் இதேபோல் மண்வள பரிசோதனை நடந்தது. இதில் மாவட்டத்தின் மண்வளம் பெருமளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் போரான் சத்துகள் மட்டும் நிலங்களில் அதிகமாக உள்ளது. மாங்கனீசு, இரும்பு சத்துக்கள் ஓரளவு பரவாயில்லை. தழைச்சத்து இல்லவே இல்லை. தாமிரம், துத்தநாகம், கந்தகம், சாம்பல் சத்து, மணிச்சத்து, தழைச்சத்து போன்ற சத்துக்கள் மிக, மிக குறைவாக உள்ளது.
இந்த சத்துக்கள் உள்ள உரங்களை நிலங்களில் இட்ட பின்னரே சாகுபடி செய்ய முடியும் என்ற அளவுக்கு நிலங்களில் சத்துக்குறைபாடு அதிகமாக உள்ளது. இனிமேல் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண்வளத்தை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu