கனடாவிற்கு செக் வைத்த இந்தியா இதுவரை இல்லாத அளவு காட்டம்!

கனடாவிற்கு செக் வைத்த இந்தியா இதுவரை இல்லாத அளவு காட்டம்!
X
கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களை அரசு திரும்ப பெற்று கொண்டதால் கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா- கனடா ராஜதந்திர உறவில் சிக்கல் உருவாகியதை தொடர்ந்து இந்தியா கனடாவிற்கு அதிக பட்ச எச்சரிக்கை மற்றும் கண்டன அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு வரலாற்றில் இவ்வளவு கடினமான வார்த்தைகளுடன் கூடிய ஒரு அறிக்கையை இன்னொரு நாட்டிற்கு வழங்குவது இந்தியா வழங்குவது இதுவே முதல் முறை. பாகிஸ்தானை கூட இவ்வளவு கடுமையாக எச்சரிக்கை செய்ததில்லை.

பாரதம் உலகில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் வலிமை மிக்க நாடு. இது வல்லரசுகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீனா, கனடா போன்ற நாடுகள் இந்தியாவில் எதிர் கட்சிகளையும், தீவிரவாதிகளையும் போராளிகளையும் தூண்டி விட்டு உள்நாட்டு குழப்பங்களை உருவாக்கி விடுவது, அயலுறவு கொள்கைகளை மீறி அனாவசியமாக நம் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது, அறிவுரை சொல்வது, நம் அண்டை நாடுகளை தூண்டி விட்டு மோதல் போக்கை வளர்த்து விடுவது, பொய் குற்றசாட்டுகளை உலக நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் சொல்லி உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது என்று அட்டகாசங்கள் செய்து வருகின்றன.

அந்த வகையில் கனடா செய்யும் குரங்கு சேட்டைகள் மிக அதிகம். கனடா என்று சொல்வதை விட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்று சொல்வது சரியாக இருக்கும். கனடா பிரதமருக்கு இப்போது தேர்தல் சிக்கல். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை அவருக்கு. எனவே வாக்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அவர் கையில் எடுத்திருக்கு மிக அபாயகரமான ஆயுதம் இந்தியாவினை சீண்டுவது.

வாக்கு வங்கியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் ட்ரூடோ. இந்தியாவுடானான மோதல் போக்கை கடைபிடிக்க அதுவே முக்கிய காரணம். இந்தியா, கனடா இடையே தீராத பகை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கனடா தொடர்ந்து இந்தியாவை வார்த்தைககளால் சீண்டிக் கொண்டே இருக்கிறது.

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங்கின் கொலைக்கு இந்திய தூதரக ஏஜெண்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி 2023ல் மிகப்பெரிய குற்றசாட்டை வைத்தது கனடா. அன்று முதல் அவ்வப்போது குற்றம் சாட்டுவதை வாடிக்கையாகவும் செய்து வந்தது.

ஒரு குற்றசாட்டை வைக்கும் போது அதற்கான ஆதாரத்தோடு சொல்ல வேண்டும், ஆனால் இந்த நொடி வரையிலும் அந்த கொலையில் பாரத அரசுக்கு தொடர்பு உண்டு என்பதற்கு சின்ன ஆதரத்தை கூட கனடா அரசால் வழங்க முடியவில்லை.

மாறாக தொடர்ந்து இந்த குற்றசாட்டை கனடா பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்து கொண்டே இருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் தொடர்ந்து மூக்கை நுழைத்து கருத்து சொல்லி கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை கெடுப்பது.

இந்தியாவில் நடைபெற்ற பல தீவிரவாத செயல்களுக்கு காரணமான ஹர்தீப் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு கனட பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தி இந்தியா மீதான வன்மத்தை பகிரங்கமாக தெளிவுபடுத்தினார் ட்ரூட்டோ.

இதற்கெல்லாம் இந்தியா தொடர்ந்து அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அதன் சீண்டல் எல்லை மீறி செல்ல தொடங்கி விட்டது. லாவோஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியிடம் ஒரே இந்தியா உருவாக்க மனது வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததாக தெரிவித்தார் ட்ரூடோ, இது இந்தியாவிற்கு அவமானம் தரும் பேச்சு இல்லையா?

ஆனால் இந்திய தரப்பில் அப்படி எந்த கோரிக்கையும் கனடா பிரதமர் வைக்கவும் இல்லை, அதை இந்தியா அனுமதிக்கவும் செய்யாது என கடுமையாக மறுத்தது. அதன் பின் இந்திய தூதரக அதிகாரிகள் கிரிமினல் வேலைகளில் பின்னிருந்து இயக்குவதாக இந்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய கனடா பிரதமர் ட்ரூடோ, இந்திய வெளியுறவு தூதர் சஞ்சய் குமாரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உச்சக்கட்ட சண்டித்தனம் செய்தார். ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் செல்ல, கடுமையான பதிலடிக்கு தயாரானது இந்தியா.

கனடாவில் இருக்கும் இந்திய தூதருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என திரும்ப பெற்றுக் கொண்டதோடு இல்லாமல், இந்தியாவில் இருக்கும் ஆறு கனடா தூதர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என கெடு விதித்தது நம் பாரத அரசு. அவமானம் தாங்க முடியாமல், இப்போது இந்திய தூதரை தாங்கள் தான் வெளியேற சொன்னதாக பசப்பி கொண்டிருக்கிறார் ட்ரூடோ.

இதற்கெல்லாம் சேர்த்து பதில் கொடுக்கும் வகையில் மிக மிக கடுமையான கடிதம் ஒன்றை இந்திய அரசு வழங்கியுள்ளது. அதை கனடா அரசுக்கான கடிதம் என்று கூட இந்திய அரசு குறிப்பிடவில்லை. ட்ரூடோவின் அரசிற்கு என்று அழைத்து தான் கடிதமே தொடங்குகிறது.

இந்த கண்டனம் இந்திய தூதரை விசாரணைக்கு அழைத்ததற்கானது. ஒரு நாட்டின் தூதரை நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைப்பது வெளியுறவு கொள்கைக்கு முரணானது. அதை செய்துள்ளது கனடா. அதற்கான கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அடுத்து அங்கிருக்கும் இந்திய மக்களுக்கு விசா, குடியுரிமை கொடுக்காமல் அலைழிப்பதற்கும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிருக்கும் பல போராளி கூட்டத்திற்கு தலைமையகம் கனடா என்பதை ஆதாரத்தோடு சொல்லி, மேற்படி தீவிரவாதிகளை சட்டவிரோதமாக வரவழைத்து உடனடி குடியுரிமை வழங்குவதையும், அந்நாடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டு இந்தியாவை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, இந்திய பிரதமரின் படத்தை எரிப்பது போன்ற சமூக விரோத செயல்களை கருத்து சுதந்திரம் என அனுமதித்து ரசிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை வன்மையாக கண்டித்துள்ளது.

ஆகவே மிஸ்டர் ட்ரூடோ உங்கள் பசப்புத்தனத்தை எங்களிடம் காட்ட வேண்டாம், இந்தியா கனடா நாடுகள் நல்ல நட்பு நாடுகள், விரோதிகள் போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம், உங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு இரு நாடுகளுகிடையேயான நட்புறவை கெடுக்கும் உங்கள் பாட்சா பலிக்காது, இனியும் இது தொடர்ந்தால் அதற்கான விளைவுகளும் பதிலடியும் மிகவும் கடுமையாக இருக்கும் என தடித்த வார்த்தைகளில் எச்சரிக்கையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது நம் பாரத அரசு.

கனடாவில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் 40% இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். 14% முதலீட்டாளர்கள் இந்தியர்கள். அவர்களை இந்திய அரசு திரும்ப அழைத்து கொண்டால் ஒரே நாளில் அத்தனை கல்வி நிறுவனங்களும் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.

அதுபோல சில இரும்பு தளவாடங்கள், உயிர் காக்கும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவிலிருந்தே செல்கிறது. ஏற்றுமதியை நிறுத்தினால் கனடாவின் கட்டுமானமே ஸ்தம்பித்து விடும். இந்த அளவிற்கான எதிர்ப்பை நிச்சயம் கனடா எதிர்பார்த்திருக்காது. இது நிச்சயம் ட்ரூடோவிற்கு அவப் பெயரை ஏற்படுத்தும்.

நம் அரசு அனுப்பிய கடிதமும், அதில் இணைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களும் உலக நாடுகளால் வேர்ட் பை வேர்ட் படிக்கப்படும், ட்ரூடோவின் முகத்திரை கிழியும். ஏற்கனவே இருக்கும் கொஞ்ச பெயரும் கெட்டு இருக்கும் வாக்கு சதவீதமும் சரியும். இப்போதே கனடா நாட்டு எம்.பி.,க்களில் 20 பேர் ட்ரூடோவை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். கனடா மக்களும் ட்ரூடோ மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அங்கு விரைவில் நடக்க உள்ள தேர்தலில் ட்ரூடோவை மக்கள் வீழ்த்தி விடுவார்கள் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வது என்பது இதுதான்...

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!