அமெரிக்காவை ஆளப்போகும் இந்தியர்கள்!

அமெரிக்காவை ஆளப்போகும் இந்தியர்கள்!

பைல் படம்

பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் அமெரிக்கா பொருளாதாரத்தை இந்தியா கைப்பற்றுள்ள நிலை உருவாகி வருகிறது.

இங்கே மீண்டும் முக்கியமானதொரு விஷயம், எந்த ஒரு நாடும் தன் படைபலம் மூலம் இன்னொரு நாட்டை கைப்பற்றி ஆள முடியாது. ஆனால் பொருளாதாரத்தால் அடக்க முடியும், அழிக்க முடியும், ஆளவும் முடியும்! ஆயுதங்களால் தோற்கடிக்க முடியாத சோவியத் யூனியனை, பொருளாதாரத்தால் தோற்கடித்தது அமெரிக்கா. பாகிஸ்தான் முதல் இலங்கை வரை 18 நாடுகளை Debt Trap மூலம் இன்று சீனா தன் கைப்பிடியில் வைத்திருக்கிறது.

நாம் ஒரு புல்லட் இல்லாமல், போரில் வெல்லாமல், பாகிஸ்தானை பொருளாதாரத்தால் வீழ்த்திக்கொண்டு இருக்கிறோம். அப்படியெனில் 80 ஆண்டுகளாக உலகை ஆண்ட அமெரிக்காவை இந்தியா கைப்பற்ற வேண்டுமெனில், அதன் ஆயுத பலத்தை எதிர்கொள்ளாமால், அதன் பொருளாதாரத்தைத்தானே பார்க்க வேண்டும். அதன் இன்றைய நிலையை பார்ப்போம். அமெரிக்கா என்பது தனது பொருளாதாரத்தை விட, பல நாடுகளின் முதலீடு என்ற பெயரில் கடன் வாங்கியே வாழும் நாடு. அதன் கடன் ஒவ்பொரு வருடமும் உயர்ந்து கொண்டே போகும் போது, அதன் வளர்ச்சியும் (GDP) உயர்ந்ததால் அது தெரியவில்லை. ஆனால் அதன் வளர்ச்சி நின்று விட்டது, ஆம் அதன் தற்போதைய Recession என்பது தற்காலிகமானதல்ல, நிரந்தரமானது. ஏனெனில் அதன் வளர்ச்சி உச்சம் தொட்டு விட்டது.

அமெரிக்காவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வது மூன்றில் இரு பங்காக இருந்த அணுமின் உற்பத்தி. அதன் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் 2030க்குள் மீண்டும் புதுப்பிக்க வேண்டுமெனில் அதற்கு மிகப்பெரிய தொகை தேவை. ஆனால் அதன் மோசமான பொருளாதார நிலையில் அதை செய்ய முடியாததால், அது தனது அணு மின் நிலையங்களை மூடவேண்டிய சூழலில் உள்ளது. அப்போது அது மீண்டும் வேறு எரிசக்தியை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அது மட்டுமல்ல 19 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க நாடுகளின் கைதிகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட அதன் மிகப்பெரிய சாலைகள் இன்று பழுதடைந்து விட்டது. அதை புணரமைக்க அதனிடம் நிதியில்லை. அதன் உற்பத்தி விலை என்பது 3 மடங்கிலிருந்து 7 மடங்கு வரை உயர்ந்து விட்டது. அவ்வளவு பணம் செலவிட்டு உற்பத்தி செய்தால் கூட வாங்க நாடுகள் இல்லை. என்பதால் அது மிகப்பெரிய பொருளாதர வீழ்சியில் சிக்கி விட்டது.

இந்த சூழலில் அமெரிக்கா தனது கடன் வாங்கும் லிமிட்டான 31.4 ட்ரில்லியனை அடைந்து விட்டது. அதன் ஷீலிங்கை 31.4 ட்ரில்லியனில் இருந்து 32.9 டிரில்லியனாக உயர்த்த புதிய சட்ட வடிவம் கொடுத்துள்ளார்கள். அதை உடனடியாக செய்ய வெண்டும், இல்லாவிட்டால் அரசாங்கம் கொடுக்கவேண்டிய சம்பளம் கூட கொடுக்க முடியாமல் டிஃபால்ட் ஆகிவிடும்.

அது என்ன Debit Ceiling? அதை உயர்த்துவதில் என்ன சிக்கல்?

ஒரு நாட்டின் Debt Ceiling என்பது GDP யில் 77% வரை செல்லலாம் என்று IMF சொல்கிறது. அதற்கு மேலே சென்றால் அதன் வளர்ச்சி வெகுவாக பாதிக்கும். இந்தியாவின் DC 2021 ல் 87.9 % வரை உயர்ந்தது. உலகின் பல நாடுகள் 100% மேல் உள்ளது. அமெரிக்காவில் அது 2022 ல் 123.32% ஆக இருந்தது. அதுவே 2008 ல் 132.2% ஆக மிக அதிக அளவில் உச்சம் தொட்டது.

அமெரிக்காவின் GDP 2021ம் ஆண்டு 23.32 டிரில்லியன் ஆக இருந்தது. இன்று 23.6 ட்ரில்லியன் டாலராக மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் அதன் கடன் 123% ஆக இருந்தது இன்று 129% ஆக மிக வேகமாக உயர்ந்துள்ளது. இன்று அதன் Dent Ceiling உயர்த்த வேண்டுமெனில் அதன் GDP யை உயர்த்த வேண்டும். ஆனால் அதன் பொருளாதாரம் வீழும் நிலையில் அதை ஒத்துக்கொள்வார்களா என்பது தெரியாது, ஆனால் வேறு வழியில்லை.

இன்றைய நிலையில் ஏற்கனவே அதன் லிமிட்டை தொட்டுவிட்ட நிலையில் அதை உயர்த்தாவிடில் அரசாங்கம் Default ஆக வேண்டும். எனவே அதை உயர்த்த Democrate அரசு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் அதை ரிபப்ளிகன் எதிர்க்கிறார்கள். இதை அனுமதிக்காவிட்டால் அமெரிக்கா திவால் என்பது தெரியும் என்பதால் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

இதுவரை உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்காவிற்கு கடன் கொடுத்து வந்தது. ஆனால் உக்ரைன் போரில் ரஷ்யாவின் 650 பில்லியன் டாலரை ஆட்டய போட்டதால், அமெரிக்காவின் மீது நம்பிக்கை பெருமளவில் வீழ்ந்துள்ளது. மேலும் இது போன்ற சூழலில், அமெரிக்கா ஒரு போரை கொண்டு வந்து, அதன் மூலம் Crude Oil விலைதை உயர்த்தி, அதன்மூலம் விலைவாசி உயரும்போது உலக.நாடுகளுக்கு டாலர் டிமாண்ட் கூடினால், டாலரை பிரிண்ட் செய்து வாழ்ந்தது அமெரிக்கா.

ஆனால் அமெரிக்காவின் டாலர் உலகம் முழுவதும் பயன்படுத்திய அளவு 71% லிருந்து 51% க்கு கீழே வந்துவிட்ட நிலையில், அதன் டிமாண்ட் Dedollaraization மூலம் சரியும் என்பதால், அதற்கு கடன்கள் கொடுக்க முன்வர மாட்டார்கள், ஆனால் நாம் அவர்களிடம் கடன் வேண்டுமானால் வாங்கலாம்.

அடுத்து இந்தியா இப்போது கடன் கொடுத்தால் நமது $1:₹82.16 Ratio வில் இருக்கிதது. நமது ரூபாயை உலக நாடுகள் நான்காவது International Currency ஆக ஏற்றுக்கொண்டு வரும் சூழலில், நமது ரூபாய் மதிப்பு உயரும், டாலர் விழும்போது பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்னும் சொல்லப்போனால் Purchase Parity Power இன் இன்றைய டாலர் மதிப்பு வெறும்.₹22 தான். எனவே டாலர் மதிப்பை வேகமாக வீழ்த்த முடியும், ஆனால் அது இந்தியா பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால் அதை இந்தியா செய்யவில்லை.

அமெரி்க்காவிற்கு பெரிய கடன் அல்லது முதலீடு செய்த நாடு ஜப்பான் மற்றும் சீனா. இரண்டுமே இப்போது மாற்று முதலீட்டுக்கான வழியை தேடுகிறது. ஜப்பான் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. எனவே அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு தேவையான முதலீடுகள் வராமல் பெரிய சரிவை சந்திக்கலாம்.

ஏற்கனவே அங்கு மக்கள் பெரும்பாலும் ஹோட்டலில் சாப்பிடுவார்கள். வருமானம் வருவதற்கு முன்பு கடன் வாங்கி செலவு செய்வார்கள். அவர்கள் வருமானத்திற்கு கட்டுபடியாகாமல், இன்று வீட்டில் சமைக்க கடன் வாங்கி காய்கறி முதல் அத்தியாவசிய சேவையை செய்கிறார்கள். ஆனால் அந்த கடனைக்கூட திரும்ப செலுத்த முடியாததால், கிரிடிட்டில் அதை இப்போது செய்ய முடியவில்லை. அதனால் மேலும் பொருளாதாரம் வீழும், பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் ஏராளம்.

ஆனால் அங்கே இருக்கும் இந்தியர்களுக்கு இந்த பிரச்சினை இருக்காது. நம்மவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவதும், சேமிப்பதே நமது முக்கிய நோக்கமாக இருப்பதால் பிரச்சினை இருக்காது. நம்மவர்கள் இந்தியாவிற்கு குடும்பத்தோடு வருவது என்றால் Flight Ticket விலை பார்த்துத்தான் வருவார்கள். இப்போதைய நிலையில் Round Trip 4 லட்சங்களுக்கு மேல் என்றால், அடுத்த வருஷம் பார்த்துக்கொள்ளலாம் என்று வரமாட்டார்கள். ஆனால் அமெரிக்கர்கள் அதுபற்றியெல்லாம் சிந்திக்கவே மாட்டார்கள். அப்படி செலவு செய்யும் அவர்களிடம் காசு இல்லை, காசு இருக்கும் இந்தியர்கள் செலவு செய்வதில்லை.

மேலும் அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு ஏற்றுமதி செய்து வந்த ஹை-டெக் பொருட்களை இன்று ஆசிய நாடுகளே செய்வதால், அதன் விலை வித்தியாசம் மிக அதிகமானதால் அங்கே வாங்குவதில்லை, அதனால் செலவை குறைக்க இந்தியாவை நாடுகிறார்கள். உதாரணமாக ஒரு வந்தே பாரத் ரயில் இந்தியாவில் உற்பத்தில் செய்ய 100 கோடி என்றால், அதை அமெரிக்காவில் செய்ய மூன்று மடங்காகிறது. அதையெல்லாம் விடுங்கள், இன்று அமெரிக்கா 90 தேஜஸ் விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. நாம் அதற்கு பதிலாக C1B விமானங்களை கேட்கிறோம்.

அதனால் மற்ற நாடுகள் அமெரிக்க நாடுகளிடம் வாங்குவதை குறைத்துக்கொண்டு விட்டன. இது மேலும் சரிவை தரும். அந்த சூழலில் பண வீக்கம் அதிகரிக்கும். அப்போது இந்தியா ஆர்டர் செய்த 850 போயிங் விமானங்கள் ஒப்பந்த விலையில் கொடுக்க முடியாது. இந்தியா அந்த நீண்டகால ஒப்பந்தத்தை, டாலர் விலை வீழ்ச்சியை எதிர்பார்த்துதான் செய்துள்ளது.

இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சியை தடுக்க வேண்டும் எனில், அமெரிக்காவிற்கு தேவை ஒரு பெரிய போர். அதில் ரஷ்யா அல்லது சீனா அல்லது இந்தியா வீழ்ந்தால் தான் அமெரிக்காவால் வாழ முடியும். அதற்காக அவர்கள் மோதிக்கொள்ள மாட்டார்களாம். இந்தியா, சீனாவுடன் மோத வேண்டும் என்பது அவர்களின் ஹைதர் காலத்து ஃபார்முலா. ஆம், சமீபத்தில் சீனா அருணாச்சலில் உள்ள நகரங்களுக்கு பெயர் வைத்தது. அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு பக்கத்து வீட்டுக்காரன் வேறு பேர்வைத்தால், நாம் பைத்தியம் என்று நாம் சொல்லிவிட்டு போய்விடுவோம். ஆனால் அதற்கு யார் காரணம் என்று பார்த்தால், முன்பெல்லாம் சும்மா இருந்த அமெரிக்கா, இன்று அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடையது என்று சொல்ல, அதற்கு சீனா செய்த எதிர்வினைதான் அந்த பெயர் வைப்பு விழா. இதெல்லாம் நன்கு தெரிந்த இந்தியா கண்டுக்காமல் ஒரு அறிக்கையோடு விட்டு விட்டது.

ஆனால் சமீபத்தில் முக்கியமான மீடியாவில் நமது RAW Agent கள் நுழைந்து விட்டதால், அவர்கள் செய்யும் திட்டமிடல்கள் இந்தியாவிற்கு முன்பே தெரிந்து விடுகிறது. எனவே இந்தியாவெல்லாம், சீனாவுடன் போருக்கு போகாது. ஏன் பாகிஸ்தானிடம் கூட போர் செய்யாது, ஆனால் ஆக்கிரமிப்பு பாக்கிஸ்தானை சத்தமில்லாமல் விரைவில், அதாவது 2024 தேர்தலுக்கு முன்பு கூட கைப்பற்றும்.

எனவே அமெரிக்கா தன்னை காப்பாற்றிக்கொள்ள நேரடியாக போர் செய்தால் மட்டுமே அதனை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்படி நேட்டோ நாடுகள் இணைந்து போர் செய்தால் ரஷ்யா சீனாவுடன் சேர்ந்து விட்டால் பிரச்சினை சிக்கலாகி விடும். அதற்காக உக்ரைன் போரில் ரஷ்யாவின் முக்கியமான தளவாடங்கள் தீர்ந்து விட்டால், அது சாத்தியமில்லை என்று திட்டமிட்டது. ஆனால் இதை நன்கு அறிந்த ரஷ்யாவோ தனது சோவியத் கால ஆயுதங்களை வைத்தே போரிடுவதால், அதை செய்ய முடியவில்லை.

எனவே அமெரிக்காவிற்கு ஒவ்வொன்றாக எல்லா கதவுகளும் மூடப்பட்டு வருகிறது. அதன் மூலம் அங்கே பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தால், அங்கே இருக்கும் கம்பெனிகளை அங்கே இருக்கும் இந்தியர்கள் மூலம் நம்மவர்கள் வாங்குவார்கள். அதை செய்யக்கூடிய அதானி, அம்பானியை முடக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்களை வீழ்த்த அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆம், இன்று கூகுள் முதல் கூரியர் வரை அங்கிருக்கும் கம்பெனிகளின் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் இந்தியர்கள்.

ஊரை, உலகத்தை எப்போதும் ஏமாற்ற முடியாமல் போவதால் இன்று அமெரிக்கர்கள் வீழ்கிறார்கள், யார் வாழ்கிறார்கள் என்று பார்ப்போம்! ஆம், அகண்ட பாரதம் என்பது வெறும் பாகிஸ்தானையும், ஆஃப்கானிஸ்தானையும் சேர்த்தல்ல, அமெரிக்காவையும், பிரிட்டனையும் சேர்த்ததே!

Tags

Next Story