இமாச்சல பிரதேசத்தில் இறந்த ராணுவவீரர் உடல் அடக்கம்
இமாச்சலில் இறந்த ஆண்டிபட்டி கோவில்பாறை கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் முத்தையா.
இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்த ராணுவவீரர் முத்தையா உடல் முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கோவில்பாறை கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா, 31. இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்தையா 2017ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இந்தோ-திபெத் எல்லைக்காவல் படையில் பணிபுரியும் இவர், இமாச்சல பிரதேசத்தில் பணியில் இருந்தார். நேற்று முன்தினம் திடீரென இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் இன்று காலை சொந்த கிராமமான கோவில்பாறைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன், வருஷநாடு எஸ்.ஐ.,க்கள் அருண்பாண்டி, ஜெயக்குமார் உட்பட போலீஸ் அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பின்னர் முழு ராணுவ மரியாதை, அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu