உலகிலேயே அதிக உயரம்.. அதிக உறைபனி... போரை சந்திக்க தயாராக இந்திய ராணுவம்!!

உலகிலேயே அதிக உயரம்.. அதிக உறைபனி...  போரை சந்திக்க தயாராக இந்திய ராணுவம்!!
X

கடும் பனிப்பொழிவில் எல்லையை பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவ வீரர்கள்.

உலகிலேயே அதிக உயரம் மற்றும் அதிக பனிப்பொழிவு நிறைந்த உறை பனியில் போரை சந்திக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

உலக நாடுகளின் ராணுவ பலத்தில் இந்தியா தான் முதலிடம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த பலம் ராணுவ வீரர்களின் உடல் திறன், மனோபலம், அவர்கள் எடுத்திருக்கும் பயிற்சி, தலைமைப்பண்பு, போர்க்காலங்களில் செயல்படும் வேகம், ஆயுதங்களை கையாளும் விதம் போன்ற பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். அதுவும் உலகிலேயே இந்திய ராணுவத்தில் பணிபுரிவது மட்டுமே மிகவும் சிரமம் நிறைந்த ஒரு காரியம். ஆமாம் எந்த நாட்டு ராணுவமும், இவ்வளவு உயரத்தில், இவ்வளவு கடுமையான உறைபனியில் நாட்டை பாதுகாக்க எல்லையில் நிற்கவில்லை. இந்திய ராணுவம் நிற்கிறது. சுதந்திரம் பெற்றது முதல் இந்திய ராணுவம் பனிப்பொழிவில் பணி புரிந்த பல ராணுவ வீரர்களை இழந்தும் இருக்கிறது.


அதுவும் தற்போது இந்திய- சீன எல்லையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவில் நிற்கிறது. பனி என்றால் குறைந்த பட்சம் 6 மீட்டர் உயரம் முதல் இன்னும் பல மீட்டர் கணிக்க முடியாத அதிக உயரம் வரை படிந்திருக்கும் உறைபனி மேல் தற்போது நிற்கிறது இந்திய ராணுவம். அதுவும் எந்த நிமிடமும் போரை சந்திக்க தயார் நிலையில். உலகில் எந்த நாட்டு ராணுவமும் இவ்வளவு கடும் பனிப்பொழிவில் நின்று தனது நாட்டை பாதுகாப்பது இல்லை.

இரண்டு ஆண்டுகளாக எல்லையில் நிற்கும் இந்திய ராணுவம் கடந்த மாதம் உச்சகட்ட தயார் நிலைக்கு சென்றது. தவாங் பகுதிக்குள் ஊடுறுவ முயன்ற சீன ராணுவத்தை இந்திய வீரர்கள் அடித்து விரட்டிய பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான சைப்ரஸ்சின் நிகோசியா நகரில் நடந்த இந்திய- சைப்ரஸ் 60ம் ஆண்டு துாதரக ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'இந்திய- சீன உறவு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா எந்த சமரசத்திற்கும் இடம் தராது' என அவர் கூறியுள்ளார். அதாவது சீனா ஒரு அடி எடுத்து வைத்தாலும், இந்திய ராணுவம் அடித்து நொறுக்கி விடும் என்பதை இவ்வளவு சூசகமாக கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை இந்த கருத்தை ஆமோதித்து, 'இந்தோ- திபெத் பாதுகாப்பு படையினர் எல்லையை பாதுகாத்து நிற்பதால், எனக்கு எல்லையை பற்றி எந்த கவலையும் இல்லை' எனக்கூறியுள்ளார். அதாவது சீனாவுடன் ஒரு அடி எடுத்து வைத்தாலும், அவர்களை அடித்து நொறுக்கப்போவது இந்தோ- திபெத் எல்லைப்பாதுகாப்பு படை தான் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோ- திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் எல்லையில் கடுமையான உறை பனியில் போருக்கு தயார் நிலையில் நிற்கும் படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனை படங்களையும், வீடியோக்களையும் பார்க்கும் போதே நமக்கு ரத்தம் உறைந்து விடுகிறது. இவ்வளவு கடும் பனிப்பொழிவில் எல்லையை பாதுகாக்க நம் வீரர்கள் படும் சிரமங்களை வார்த்தைகளில் வடிக்கவே முடியாது. நம்மை பாதுகாக்க இவ்வளவு கடும் பனிப்பொழிவில் போராடும் காவல் தெய்வங்களுக்கு நாம் இந்த நாளில் ஒரு ராயல் சல்யூட் வைத்தே ஆக வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!