உலகின் 4 வது பொருளாதார நாடு இந்தியா.. அடுத்த ஆண்டில் சாத்தியமாகும்

உலகின் 4 வது பொருளாதார நாடு இந்தியா..  அடுத்த ஆண்டில் சாத்தியமாகும்
X

 முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான்(பைல் படம்)  

2024-க்குள் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தகவல்

உலகப்பொருளாதாரத்தில் பெரும் மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதாவது மற்ற நாடுகளில் வளர்ச்சி வேகம் குறையும் நிலையில், இந்தியாவில் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.

இதனால் கடந்து பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக முன்னேறியது.அதன் பின்பு ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா மற்றும் முத்ரா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களால் உள்ளநாட்டு தொழில் வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்கிறது.

வெளிநாட்டு முதலீடுகளும் குவிகிறது. தொழில் முனைவோருக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனில் சவுகான், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 84 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா, உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.

இந்தியாவில் தயாரிப்போம்’ முன்னெடுப்பின் கீழ், தொழில்களுக்கான உரிமங்களைப் பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இது பல்வேறு தொழில்களில் சமமான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!