தேனி 4வது வார்டில் மக்களை கவர்ந்த சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.ராஜன்
தனியாக சென்று ஓட்டு கேட்கும் சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜன்.
தேனி நகராட்சி 4வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் வி.ஆர்.,ராஜன். இவர் தொழிலதிபர் மட்டுமின்றி தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர். பல ஆண்டுகளாக பல நுாறு மகளிர் குழுக்களுக்கு தலைவராக இருந்து வருகிறார். பல நுாறு கோடி கடன் பெற்று கொடுத்துள்ளார்.
இவரது வாக்குறுதிகளை கண்டு பொதுமக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மீடியாக்களே நான்காவது வார்டில் குவிந்து, இவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். பல அமைப்புகள், சங்கங்கள், நண்பர்கள், கட்சியினர் என பலரும் ஓட்டு கேட்க உடன் வருவதாக கூறி வருகின்றனர்.
ஆனால் யாரும் என்னுடன் வேண்டாம். நான் மட்டும் தனியாக சென்று எனது கொள்கைகள், திட்டங்களை மக்களிடம் விளக்கி, தென்னை மரச்சின்னத்திற்கு ஓட்டு கேட்பேன் என பிடிவாதம் பிடித்து தற்போது வரை தனி நபராக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, 'கும்பலாக சென்றால், மக்கள் சரி ஓட்டு போகிறேன் எனக்கூறி கழட்டி விடுவார்கள். நான் தனியே செல்லும்போது என் கொள்கை, திட்டம், தேர்தல் வாக்குறுதி, செயல்பாடு பற்றி விளக்கி கேட்கின்றனர். இது தான் என பிளஸ் பாயின்ட் என்கிறார் வி.ஆர்.ராஜன்.
வார்டு மக்களிடம் கேட்டபோது, 'பெரும் தொழிலபதிபர் பந்தா இல்லாமல் சாதாரணமாக ஒரு பையை துாக்கிக் கொண்டு தனது நோட்டீஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு ஓட்டு கேட்கிறார். அவரது எளிமை, பண்பு, நாகரீகம், வாக்குறுதி, பொறுமை எங்களை கவர்ந்துள்ளது. பந்தா இல்லாமல் எங்களிடம் குறைகளை கேட்கிறார்.
நாங்கள் சொல்வதை மனுவாக எழுதி தருமாறு கேட்டு வாங்கிச் செல்கிறார். இது எங்களுக்கே வித்தியாசமாக உள்ளது. அவர் வாங்கிய மனுக்கள் மீது தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுத்து அதற்குரிய தீர்வுகளை பெற்றுத்தருவேன் என உறுதியளிக்கிறார் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu