தேனியில் உறுதி மொழி பத்திரம் வழங்கி சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தேனியில் உறுதி மொழி பத்திரம் வழங்கி சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

மக்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்த சுயே., வேட்பாளர் வி.ஆர்.,ராஜன்.

தேனி நகராட்சி 4வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.ராஜன் மக்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரித்தார்

தேனி நகராட்சியில் 4வது வார்டில் சுயேட்சையாக தென்னைமரச் சின்னத்தில் போட்டியிடுபவர் வேட்பாளர் வி.ஆர்.ராஜன். இவரது வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் விறுவிறுப்பினை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் களத்தில் தனியாக சென்று மக்களை சந்தித்து வரும் இந்த தொழிலதிபர் வி.ஆர்.,ராஜன் தினமும் ஏதாவது ஒரு டிரெண்ட் எடுத்து எதிரணி வேட்பாளர்களுக்கு பதட்டத்தை உருவாக்கி வருகிறார்.

நேற்று இரவு வி.ஆர்.,ராஜன் அல்லிநகரம் ஹைஸ்கூல் விரிவாக்க தெருவில் ஓட்டு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் 40 ஆண்டுகளாக ரோடு வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதிகள் இல்லை என புகார் செய்தனர். அதற்கு பதிலளித்த ராஜன், 'நான் வெற்றி பெற்றால் ஒரு மாதத்தில் எனது சொந்த செலவில் நீங்கள் கேட்ட வசதிகளை செய்து தருகிறேன்' என உறுதியளித்தார்.

அந்த மக்கள் நம்ப மறுத்து தயக்கம் காட்டவே, நீங்கள் எனது உறுதிமொழியை பத்திரமாக எழுதுங்கள்... நான் கையெழுத்து போடுகிறேன் என்றார். அந்த மக்கள் உடனே பத்திரம் வாங்கி எழுதினர். அங்கேயே கையெழுத்து போட்டு, பத்திரத்தை மக்களிடம் கொடுத்தார். இன்னும் தேர்தல் பிரச்சாரத்திற்கு மூன்று நாட்கள் உள்ளது. அதற்குள் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ? என தகவல் தொடர்பு துறையில் பணிபுரியும் அத்தனை பேரும் நான்காவது வார்டின் நிலவரத்தை உற்று கவனித்து வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in retail