தேனி மாவட்டத்தில் 36 கஞ்சா வியாபாரிகள் கைது

தேனி மாவட்டத்தில்   36 கஞ்சா வியாபாரிகள் கைது
X
தேனி மாவட்டத்தில் 36 கஞ்சா வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 58 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் முப்பத்தி ஆறு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஐம்பத்தி எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான கஞ்சா வியாபாரிகள் குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி., உத்தரவுப்படி கஞ்சா வியாபாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future