தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 அளவிற்கு விலை வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தக்காளி கிலோ ரூ. 150க்கு விற்கப்பட்டு அத்தனை பேரையும் பதறடித்தது. அரசே தக்காளியை ரேஷன் கடைகளில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் விலை மீண்டும் இறங்கி 20 ரூபாய் என வந்தது. பின் படிப்படியாக அதிகரித்து கடந்த வைகாசி மாதம் தொடக்கத்தில் கிலோ 100ஐ தொட்டது. அதன் பின்னர் மீண்டும் படிப்படியாக இறங்கி இன்று கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை மார்க்கெட்டிலேயே கிலோ 10 ரூபாய் என விற்கப்படுகிறது.
தேனி மொத்த மார்க்கெட்டில் கிலோ 6 ரூபாய் என மட்டுமே ஏலம் போனதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் தக்காளி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சின்னவெங்காயமும் இதே நிலையில் தான் நீடிக்கிறது. கடந்த மாதம் வரை சின்னவெங்காயம் கிலோ 7 ரூபாய்க்கு தான் மொத்த மார்க்கெட்டில் ஏலம் போனது. இந்த மாதம் விலை சற்று உயர்ந்துள்ளது. இருப்பினும் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. ஆனி, ஆடி இரண்டு மாதங்களும் திருவிழாக்களும் இல்லை. திருமண மற்றும் இதர விசேச முகூர்த்தங்களும் இல்லை. எனவே அனைத்து ரக காய்கறிகளின் விலைகளும் குறைந்தே இருக்கும். ஆனால் தக்காளி, சின்னவெங்காயம் போல் வேறு எந்த காய்கறிகளும் பெரும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu