தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
Goondas Act Punishment - தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 2015 மற்றும் 2016ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் உமாசங்கர் 42.வயதான இவருக்கு மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஷ்வரி '17பி' விளக்க குறிப்பாணை வழங்கினார். இதனால் உமாசங்கர் பதவி உயர்வு பெற முடியவில்லை. ஏழு ஆண்டுகள் ஆகியும் '17பி' தடையாணையால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தவித்த உமாசங்கர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பினார்.
அதன் பின்னர் ராஜராஜேஷ்வரி மீது வஞ்சம் வைத்த உமாசங்கர் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் கடந்த மே 30ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ்க்கு வந்தார். அங்கு அலுவலகத்தில் இருந்த ராஜராஜேஷ்வரியை சரமாரியாக வெட்டினார். அல்லிநகரம் போலீசார் உமாசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை அடிப்படையில் கலெக்டர் முரளீதரன் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியராக பணியாற்றிய ஒருவர் முதன் முறையாக குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu