தேனி மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் வரத்தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் தினசரி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே உள்ளது.

நேற்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 562 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 87 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது 16 பேர் மட்டுமே தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!