உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் சாலையில் வழக்குரைஞர் வெட்டிக்கொலை

உத்தமபாளையத்தில்  பட்டப்பகலில் சாலையில்  வழக்குரைஞர் வெட்டிக்கொலை
X

பைல் படம்

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் வக்கீல் ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வழக்குரைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கூடலூர் சுக்கான்கல்பட்டியை சேர்ந்தவர் வழக்குரைஞர்ல் மதன் (37). இவர் இன்று முற்பகல் உத்தமபாளையம் கோர்ட்டில் இருந்து, தனது கட்சிக்காரர் ஒருவரை டூ விலரில் ஏற்றிக் கொண்டு உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கம்பம் - தேனி சாலையில், பொதுப்பணித்துறை பயணியர் விடுதி அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒரு கார், டூ வீலர் மீது மோதியது. அப்போது டூவீலரில் வந்த இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

அந்த நேரத்தில் காரில் இருந்து இறங்கிய இருவர் வழக்குரைஞர் மதனை கோடாரியால் வெட்டினர். நிலை குலைந்த வழக்குரைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் வந்தவரும் கீழே விழுந்ததில் காயமடைந்தார். மதன் இறந்ததை உறுதிப்படுத்திய பின்ன,ர் மர்ம கும்பல் காரில் தப்பிச்சென்றது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் போலீசார், மதன் உடலை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு