உயர் அழுத்த மின் கோபுரங்களின் பிடியில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி

உயர் அழுத்த மின் கோபுரங்களின் பிடியில்  பழனிசெட்டிபட்டி பேரூராட்சி

உயர்அழுத்த மின் கோபுரங்களுக்கு கீழே அமைந்துள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி. சற்று கவனித்து பாருங்கள் எத்தனை கோபுரங்கள் குடியிருப்புகளுக்கு இடையே உள்ளன என்பது தெரியும்.

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி குடியிருப்பின் பெரும் பகுதி உயர் அழுத்த மின் கோபுரத்தின் கீழ் அமைந்துள்ளன.

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் மீது கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு செல்லும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைந்துள்ளன. ஒன்றல்ல... இரண்டல்ல... ஏராளமான மின் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட போது, அந்த பகுதிகளில் குடியிருப்புகள் எதுவும் இல்லை. இதனால் அப்போது பிரச்னைகள் எதுவும் இல்லை. காலப்போக்கில் இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து விட்டன.

தேனி மாவட்டத்திலேயே அதிகளவில் கிடுகிடுவென வளர்ந்த பகுதியாக இந்த பேரூராட்சி மாறி விட்டது. இப்போது தேனிக்கு இணையான வளர்ச்சியை பெற்றுள்ளது. இப்போது உள்ள பிரச்னை இங்குள்ள உயர் அழுத்த மின் கம்பங்கள் தான். ஊருக்குள் அதிக எண்ணிக்கையில் உயர் அழுத்த மின் கம்பங்கள் செல்கின்றன.

இதனால் பல நுாறு வீடுகளில் மக்கள் தங்கள் வீட்டின் மாடிக்கு செல்ல முடியவில்லை.துவைத்த துணிகளை காயப்போட முடியவில்லை. வீட்டு மாடிக்கு சென்றாலே மின்சாரம் அவர்களை ஈர்த்து உயிரிழப்பி னை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஏராளமாக உள்ளது.

இதனால் இந்த உயர் அழுத்த மின் கோபுரங்கள் கடந்து செல்லும் பாதைக்கு கீழே வீடு கட்டி வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் மாடிக்கு கூட செல்ல முடியாமல், ஒரு நெருக்கடியான சூழலில் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் எவ்வளவோ கோரிக்கை வைத்தும் இந்த பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரங்களின் பாதையை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம் என மக்கள் புலம்பி வருகின்றனர்.

Tags

Next Story