தேனி அருகே குப்பை கொட்டும் தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை

தேனி அருகே குப்பை கொட்டும் தகராறில்  கூலித்தொழிலாளி அடித்துக் கொலை
X
Murder Case News- தேனி அருகே பூதிப்புரத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.

Murder Case News- தேனி அருகே பூதிப்புரத்தில் ஊர்க்காலன் (வயது 49 )என்பவருக்கும், ராதாகிருஷ்ணன்( 41 )என்பவருக்கும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ராதாகிருஷ்ணன் தரப்பில் தவறு இருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த மகேஸ்வரக்குமார்( 53,) அந்த தரப்பினரை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், அவரது உறவினர்கள் செல்வம், சதீஷ்குமார், முருகதாஸ், வெள்ளையன் ஆகியோர் மகேஸ்வரக்குமாரை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரக்குமார் இறந்தார். இதுபற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!