பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பாக தேனி எஸ்.பி.எச்சரிக்கை

The Warning | Theni News Today
X

பிரவீன்உமேஷ் டோங்கரே

The Warning -வாகன சோதனையின் போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The Warning -தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தேனி, போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி, பெரியகுளம் டி.எஸ்.பி., சப்-டிவிசன்களி்ல் வாகன வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 504 டூ வீலர்கள், 3 கார்களுக்கு யாரும் உரிமை கோரி வரவில்லை. இந்த வாகனங்கள் குறித்து 21 போலீஸ் ஸ்டேஷன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் விவரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்கள் தாலுகா அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். அதில் தங்கள் வாகனங்கள் உள்ளதா என்பதை அறிந்து கொள்பவர்கள் தாசில்தாரிடம் விண்ணப்பித்து 15 நாட்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசு உடைமை ஆக்கப்படும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!