தேனி அருகே பிளஸ் 1 மாணவன் கொலை தொடர்பாக நண்பர்கள் மூவர் கைது

Today Murder News - தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த ஸ்டீபன் என்பவரது மகன் மாதவன்(வயது 16.). இவர் உத்தமபாளையம் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார். கடந்த ஜூன் 18ம் தேதி வெளியில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இரண்டு நாள் கழித்து இவரது வீட்டிற்கு அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து மாதவன் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாதவனின் நண்பர்கள் அல்லாபிச்சை,( 22 )மற்றும் 12 வயது, 13 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மாதவனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஸ்நாக்ஸ் வாங்கி வரச்சொல்லி உள்ளனர். மாதவன் ஸ்நாக்ஸ் வாங்கி வரவில்லை. எனவே அன்று மாலை நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அல்லாபிச்சை மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து மாதவனை அருகில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி உள்ளனர். இதில் மாதவன் உயிரிழந்தார். இவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu