வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் இரண்டு பெண்கள் காயம்

வருஷநாடு அருகே கரடி தாக்கியதில்  இரண்டு பெண்கள் காயம்
X

கரடி (பைல் படம்).

தேனி மாவட்டம் வருஷநாடு மஞ்சனூத்து அருகே கரடி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லீதியாள் (வயது 29. )இதே கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி,( 55.)இவர்கள் இருவரும் மஞ்சனூத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள மகாலிங்கம் என்பவரது இளவந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த கரடி இருவரையும் தாக்கியது. இருவரும் அங்குள்ள குடிசைக்குள் ஓடி ஒளிந்து உயிர் தப்பினர். இருவருக்கும் கண், நெற்றி, தலைப்பகுதிகளில் கரடி தாக்கி பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!