இளையராஜாவிற்கு எம்.பி., பதவி, ரசிகர்கள் கொண்டாட்டம்: பா.ஜ., வாழ்த்து

இளையராஜாவிற்கு எம்.பி., பதவி, ரசிகர்கள் கொண்டாட்டம்: பா.ஜ., வாழ்த்து
X

தேனி மாவட்ட பா.ஜ., மருத்துவ அணியினை சேர்ந்த டாக்டர் பாஸ்கரன்.

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தை சேர்ந்த இளையராஜாவிற்கு எம்.பி., பதவி வழங்கப்பட்டதற்கு பா.ஜ., வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் நியமன எம்.பி.,யாக அறிவிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தை சேர்ந்தவர். இவரை பா.ஜ., எம்.பி.,யாக நியமனம் செய்ததை ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் அவரது சொந்த ஊரான பண்ணைப்புரத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. அருகில் உள்ள தேவாரம், கோம்பை உத்தமபாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ராஜாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தேனி மாவட்ட பா.ஜ., மருத்துவ அணியினை சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் எம்.பி., இளையராஜாவிற்கு வாழ்த்து அனுப்பி உள்ளார். அதில் 'என் குருவினும் உயர்வான காவி களப்பணி பண்ணைப்புரத்து இளையராஜாவுக்கு பா.ஜ., மருத்துவ அணியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்' எனக்கூறி உள்ளார். இவரை தொடர்ந்து பா.ஜ.,வின் பிற நிர்வாகிகளும், தேனி மாவட்ட ரசிகர்களும் இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project