தேனியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் இட்லி, தோசை மாவு

தேனியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் இட்லி, தோசை மாவு
X
கேரளாவிற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இட்லி, தோசையினை விரும்பி சாப்பிடுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் பல ஆயிரம் கிலோ இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள ஓட்டல்கள் மொத்தமாக ஆர்டர்களை கொடுப்பதால், இட்லி, தோசை மாவு வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தினால் கேரளாவில் உள்ள ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டி உள்ளது. வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் உடலுக்கு எந்த இடையூறும் செய்யாத இட்லி, தோசை உணவு வகைகளை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதனால் இட்லி, தோசை மாவுக்கு கேரளாவில் பெரும் மவுசு உருவாகி உள்ளது. கேரளாவில் உள்ள ஓட்டல்கள் தேனி மாவட்டத்தில் இருந்து இட்லி, தோசை மாவு ஆர்டர் செய்து வாங்குகின்றன. குறிப்பாக மூணாறு, ஆனையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், எரிமேலி பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி உட்பட பல ஊர்களில் இருந்தும் மாவுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. ஒரு கிலோ மாவுக்கு 50 ரூபாய் வரை விலை கொடுக்கின்றனர்.

அரிசியாக கேரளாவிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கிறது. ஆனால் இட்லி, தோசை மாவு முழுமையாக வணிக பொருளாக மாறி விடுவதால் தடையின்றி கொண்டு செல்ல முடிகிறது. இதனால் எங்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது என தேனி மாவட்ட சிறு, குறு இட்லி தோசை மாவு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது