கடனிலிருந்து சுய உதவிக்குழுக்களை மீட்பேன்: அதிமுக வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி

கடனிலிருந்து சுய உதவிக்குழுக்களை மீட்பேன்:  அதிமுக வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி
X

தேனி நகராட்சி 29வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆசிரியை ஷீலா வீடு, வீடாக ஓட்டு சேகரித்தார்.

மகளிர் குழுக்களை கடன் தொல்லைகளின் இருந்து மீட்டு சிறப்பான வகையில் உருவாக்குவேன் என அ.தி.மு.க., வேட்பாளர் ஆசிரியை ஷீலா உறுதி அளித்துள்ளார்.

தேனி நகராட்சி 29வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுபவர் ஷீலா. பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் இவர், விடுமுறையில் வார்டு மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவர் தன்னுடைய வாக்குறுதி குறித்து கூறுகையில், நான் கடந்த ஒரு வாரமாக செய்யும் பிரச்சாரத்தில் ஒரு உண்மையை கண்டறிந்தேன். பெண்களை மகளிர் குழு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து கடனில் சிக்க வைத்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்துள்ளன. இவர்களை கடனில் இருந்து மீட்பதே எனது முதல் பணி.

அரசு பல திட்டங்களின் வழியாக மகளிர் குழுக்கு பல கோடி ரூபாய் மானிய உதவிகள் வழங்குகிறது. இந்த மானியக்கடனை பலரும் ஏமாற்றி பெற்றுக்கொள்கின்றனர். மகளிருக்கு சென்று சேருவதில்லை. எனவே தான் தனியாக ஒரு சிறப்பு அலுவலகம் அமைக்க உள்ளேன். இந்த அலுவலகத்தில் தனியாக பணியாளர்களை நியமித்து, என் வார்டு மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, பெண்களின் சுயசார்பினை அதிகரித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவேன்.

அரசு வழங்கும் மானியங்களை இவர்களுக்கு பெற்றுத்தந்து தொழில் வளத்தை உருவாக்கி பெண்களின் தனிநபர் பொருளாதாரத்தை மிகவும் சிறப்பான பாதைக்கு மாற்றுவேன் என அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!